"இனை வரும் பலரும்,
எண் இல் ஈட்டமும் வேறும் ஆகி,
நனை வரும் பொழிலின் நிற்பார். நயப்பொடு நெடுங்கால், எஞ்சா
கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று, ஈங்கு
என்னை அனைவரும் புகழும் ஓதை அலையும் நீல் முகிலும் ஆற்றா. |
"இவ்வாறு,
இங்கு வந்து சேரும் எண்ணிக்கை இல்லாத பலரும்,
கூட்டமும் வேறு வேறாய்த் தனியாகவும், அரும்புகள் தோன்றும் சோலைபோல் இதனைக் கருதித்
தவத்தில் நிலை பெறுவர். இரைச்சலோடு
வளர்ந்து வரும் திரண்ட நெருப்புப் போல் வெதும்பிய இப்பாலைவனத்தில்
விருப்பத்தோடு நெடுங்காலம் தளராமல் நோன்பு செய்து, அனைவரும்
இங்கு என்னைப் புகழும் ஓசைக்குக் கடல் அலையும் கருமேக முழக்கமும்
ஈடாக மாட்டா.
| 81 |
துறவினா லுடலி
னாக்கை
துறந்ததோ
ருயிர்க ளொப்பா
ருறவினா லன்பின் மிக்கோ
ருயிர்க்கெலா
முடல்க ளொப்பா
ரறவினா வெழீஇய தன்மைத்
தருள்மலி
யமர ரொப்பார்
நறவினா லலர்ந்த கானு
நலத்தில்வா
னுலகொப் பாமே. |
| |
"துறவினால் உடலின்
ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார்;
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார்;
அறவினா எழீஇய தன்மைத்து அருள் மலி அமரர் ஒப்பார்
நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வானுலகு ஒப்பு ஆமே. |
"அவர்கள்
துறவின் மேம்பாட்டால் தம் உடலின் கட்டினையே
துறந்தொழித்த ஒப்பற்ற உயிர்களுக்கு ஒப்பாவர்; ஆயினும், பிற உயிர்கள்
மீது உறவு கொண்டதனால், அன்பில் மிக்கவராய் அவ்வுயிர்களுக்கெல்லாம்
தாமே உடல்கள் போல் இருப்பர்; அறத்தைப் பற்றிய ஆய்வைத் தம்
மனத்து எழுப்பிய தன்மையால் தெய்வ அருள் நிறைந்த வானவருக்கு
ஒப்பாவர்.
|