|
அவர்கள் புண்ணியப்
பயனால் தேனோடு மலர்ந்த அப்பாலை நிலமும்
தன் நலத்தினால் வானுலகிற்கு ஒப்பாகும்.
'ஓர்
உயிர்கள்' ஒருமை பன்மை மயக்கம், 44ஆம் பாடல் காண்க.
| 82 |
உள்ளிய தவநவ்
வேறி
யூக்கநீண்
மரத்தை நாட்டி
விள்ளிய வன்பு முட்கும்
வியனிரு
பாயும் பாய்த்தித்
தெள்ளிய வரக்கால் வீசத்
தியானமீ
காம னாக
வள்ளிய வினைநீ ரீர்ந்தூர்ந்
தரிதில்வீட்
டுலகிற் சேர்வார். |
| |
"உள்ளிய தவ
நவ்வு ஏறி, ஊக்க நீள் மரத்தை நாட்டி,
விள்ளிய அன்பும் உட்கும் வியன் இரு பாயும் பாய்த்தி,
தெள்ளிய வரக் கால் வீச, தியானம் மீகாமன் ஆக,
வள்ளிய வினைநீர் ஈர்ந்து ஊர்ந்து, அரிதில் வீட்டு உலகில் சேர்வார். |
"தாம்
கருதிய தவம் என்னும் கப்பலில் ஏறி, ஊக்கம் என்னும் நெடிய
பாய் மரத்தை நாட்டி, மலர்ந்த தெய்வ பத்தியும் பயமும் என்னும்
அகலமான இரு பாய்களையும் விரித்து, தெளிந்த தெய்வ வரம் ஆகிய
காற்று வீச, தியானத்தைக் கப்பலோட்டியாகக் கொண்டு, நிறைந்த
பாவவினை என்னும் கடலை அறுத்து நகர்ந்து, அரிய வகையில் அவர்கள்
மோட்ச வுலகம் சேர்வர்.
தவத்தைக்
கப்பலாகக் கொண்டு அமைத்த முற்றுருவகம் சிறப்புற
அமைந்த தன்மை கருதத் தக்கது.
| 83 |
வவ்விய தவங்கெட்
டம்மா
மரக்கலங்
கவிழ்ந்த தேபோ
லவ்விய முந்நீர் மூழ்கி
யழுந்துவர்
பலரி வர்க்குட் |
|