கவ்விய வுணர்வின்
றெப்பங்
கண்ணினீர்க்
கடலை நீந்திச்
செவ்விய கதியின் வீட்டைச்
சேர்வரோ
ரிருவ ரென்றான். |
| |
"வவ்விய தவம்
கெட்டு அம் மா மரக்கலம் கவிழ்ந்ததே போல்,
அவ்விய முந்நீர் மூழ்கி அழுந்துவர் பலர்; இவர்க்குள்
கவ்விய உணர்வின் தெப்பம் கண்ணின் நீர்க் கடலை நீந்தி
செவ்விய கதியின் வீட்டைச் சேர்வர் ஓர் இருவர்" என்றான். |
"பலர்
அப்பெரிய கப்பல் கவிழ்ந்தது போல தாம் பற்றிய தவம்
இடையே கெட்டு, பாவம் என்னும் கடலில் மூழ்கி அழுந்துவர்.
இவர்களுக்குள்ளும் ஒருவர் இருவர் கவ்விப் பிடித்த உணர்வு என்னும்
தெப்பத்தால் வருத்தம் எனும் கண்ணீர்க் கடலில் நீந்தி, செவ்விய கதியாகிய வான்வீடு
போய்ச் சேர்வர்" என்று திருமகன் உரை முடித்தான்.
கடலை
நீந்தி - ஏழாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமையாய் உருபு
மயங்கி வந்தது. "ஆகையால், தவம் செயத் துணிவது அரிதாயினும்,
அதிலேயும் அரிதாம் பிடித்த தவம் கைவிட்டவர் மோட்சகரை ஏறுதல்
என்பதாயிற்று" என்பது பழைய உரைக் குறிப்பு.
| 84 |
மெய்க்குடத்
தமிர்துண் டன்ன
விரித்தசொற்
செவியின் மாந்திப்
பைக்குடத் தனைய தீயார்
பான்மையென்
றாலுஞ் சுட்ட
வக்குடத் தழிவு தீர்த்த
லரிதெனத்
தவநீத் தாரு
மிக்குடத் தனைய தேற்றா
ரென்றனன்
மதுப்பெய் கோலான். |
| |
மெய்க் குடத்து
அமிர்து உண்டு அன்ன விரித்த சொல் செவியின் மாந்தி,
"பைக் குடத்து அனைய தீயார் பான்மை என்றாலும், சுட்ட
அக்குடத்து அழிவு தீர்த்தல் அரிது என, தவம் நீந்தாரும்
இக்குடத்து அனைய தேற்றார்" என்றனன் மதுப்பெய் கோலான். |
|