|
நகைக்கத்தக்கவாறு,
இவ்வனத்துக்கு உரியதாக இவ்வளத்தை ஆக்கித்
தருகிறது தவம். ஆதலால், ஆசையை அடிப்படையாகக் கொண்டு பகைத்
தெழுந்த ஐம்பொறிகளை அடக்கி மாய்க்க வேண்டியவிடத்து, மிக்க தகுதி
வாய்ந்த தவத்தின் வடிவம் அச்சத்தைக் காட்டுவதாயினும், அத்தவம்
விளைவித்த வரங்களின் அருள் பெருகவே, வான்வீடு போன்று உயர்ந்த
திகைப்பூட்டும் நலங்களால் இவ்வனம் எழுந்து தோன்றும். இவ்வாறு
இவ்வனம் புகழில் திளைத்து விளங்கும் தன்மை, பாக்களின் தொடுப்பினால்
ஒப்பிட்டுக் காட்டக்கூடிய மாண்பின் அளவாய் அமைவதாகுமோ?
| 87 |
கொலைப்படு
செருப்படை கொடுமை போற்கொலை
குணித்துயிர்
செகுத்தன பொறிக ளாக்கிய
வுலைப்படு நெருப்பினு மழலு வேட்கையை
யுறுத்திய
தவத்தினோ டவிய மாற்றலி
னிலைப்படு வனத்தழ றிரளு மாற்றுபு
நிரைப்பட
வறத்தொகை வளரு மாட்சியோ
டிலைப்படு நிழற்கொடு மலரு பூத்திர
ளிசைத்ததோர்
பொழிற்கிணை வனமி தேத்தவோ. |
| |
"கொலைப் படு
செருப் படை கொடுமை போல், கொலை குணித்து
உயிர்
செகுத்து அன, பொறிகள் ஆக்கிய
உலைப் படு நெருப்பினும் அழலு வேட்கையை, உறுத்திய
தவத்தினோடு
அவிய மாற்றலின்,
நிலைப் படு வனத்து அழல் திரளும் மாற்றுபு, நிரைப் பட அறத்
தொகை
வளரும் மாட்சியோடு,
இலைப் படு நிழல் கொடு, மலரு பூத் திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை
வனம் இது, ஏத்தவோ? |
"கொலையை
விளைவிக்கும் போர்க் கருவிகளின் கொடுமை போல்,
கொலை கருதி உயிரை அழித்தாற்போன்று, அடுப்பில் எழும் நெருப்பினும்
எரிந்தெழும் ஐம்பொறிகள் விளைவித்த ஆசையை, நிலைப்படுத்திய
தவத்தின் துணையால் அழித்து மாற்றுதலினால், இவ்வனத்தில்
நிலைப்பட்டிருந்த திரளான வெப்பத்தையும் மாற்றி, தொகையான அறங்கள்
வரிசையாக வளரும் மாண்பினோடு, இலைகளால் உண்டான நிழலும்
கொண்டு, மலர்ந்த பூக்களின் திரளும் பொருந்தியுள்ள ஒரு சோலைக்கு
நிகராக விளங்கும் இவ் வனம் நம் போற்றுரைக்குள் அடங்குவதாமோ?
|