பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 520

                88
உடுத்தன வுடற்கொடு வுலகு காத்தரு
      ளொளிக்கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப
வெடுத்தன மலர்ப்பத நலமி தாய்த்திர
      ளிருட்டிர வொளிப்பக லனைய நீர்த்தலுங்
கடுத்தன பொறித்தழல் குளிர மீட்டலுங்
      கடுத்தடும் விடத்தினை யமிர்த மாக்கலும்
விடுத்தன கடற்றிரை நிலையின் வாய்த்தலும்
      விருப்பெழ வடுத்தநி னடியி னாக்கமே.
 
"உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள், ஒளி கெழு
                         நிலத்தினர் தொழுத பார்த்திப,
எடுத்தன மலர்ப் பத நலம் இது ஆய், திரள் இருட்டு இரவு ஒளிப்
                         பகல் அனைய நீர்த்தலும்,
கடுத்தன பொறித் தழல் குளிர மீட்டலும், கடுத்து அடும் விடத்தினை
                         அமிர்தம் ஆக்கலும்,
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும், விருப்பு எழ அடுத்த
                         நின் அடியின் ஆக்கமே".

     "உடுத்திக் கொண்ட தன்மையாய் உடல் கொண்டு அவதரித்து
இவ்வுலகத்தைக் காத்து அருள்பவனும், ஒளி நிறைந்த வானுலகத்தவர்
வணங்கித் தொழுபவனுமாகிய மன்னனே, இங்கு அடியெடுத்து வைத்த உன்
மலர் போன்ற அடியின் நலம் இதுவே என்று காட்டும் தன்மையாய், திரண்ட
இருட்டாலாகிய இரவு ஒளி பொருந்திய பகல் போன்ற தலைமை
அடைதலும், கடுமையான தீப்பொறி பறக்கும் இவ் வனத்து வெப்பம்
குளிருமாறு மீட்டுத் தருதலும், வருத்திக் கொல்லும் நஞ்சை அமிழ்தமாய்
மாற்றுதலும், கரையை விடுத்து வந்த கடல் அலையை நிலைகொண்டு நிற்க
அமைத்தலுமாகிய இவையெல்லாம், நீ விருப்பத்தோடு எழுந்து வந்து இங்கு
அடுத்த உன் அடியினால் விளைந்த நன்மைகளாகும்."

 
                89
விதுப்பட வுருப்படு மமரர் பாத்தொடை
     விளைத்திவை யிசைத்தடி தொழுது வாழ்த்துளி
சதுப்பட வகுப்பொடு பரவ தாய்ப்பல
     சதத்தணி யொருப்பட வெமவி னாப்படப்