|
அழகிய வழித்தடத்தில்
நடந்து, மூவர் உள்ளமும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க,
வண்டுகள் மொய்த்து நின்ற அவ்வனத்தை விட்டுச் சென்றனர்.
| 92 |
நீங்கி னாரெனத்
தம்மைநி னைத்திலா
ரேங்கி யாருலத் தீயிலெ ரிந்தெனப்
பாங்கி னாரிவர் பாதம கன்றகான்
வீங்கி யாரழல் தொல்லையின் மேய்ந்ததே |
| |
நீங்கினார்
என, தம்மை நினைத்திலார்,
ஏங்கி ஆகுலத் தீயில் எரிந்து என,
பாங்கினார் இவர் பாதம் அகன்ற கான்,
வீங்கி ஆர் அழல், தொல்லையின், மேய்ந்ததே. |
இம்மூவர்
தம்மை ஆதரவாக நினையாதவர், துன்பத் தீயில் எரிந்து
ஏங்கினாற்போல, தனக்குச் சார்பாக இருந்த இவர்கள் அடி நீங்கப்பெற்ற
அவ்வனத்தை, முன்போல், நிறைந்த நெருப்பு பெருகி மேய்ந்தது.
| 93 |
நெட்டி
டைத்தடம் பற்பல நீந்தினர்
மொட்டி டைக்கனை வண்டின மொய்த்ததண்
மட்டி டைக்குளிர் காட்டினுள் வான்கதிர்
பட்டி டைக்கடல் பாய்ந்தெனப் போயினார். |
| |
நெட்டு
இடைத் தடம் பற்பல நீந்தினர்,
மொட்டு இடைக் கனை வண்டு இனம் மொய்த்த தண்
மட்டு இடைக் குளிர் காட்டினுள், வான் கதிர்
பட்டு, இடைக் கடல் பாய்ந்து எனப் போயினார். |
இடையே
நெடிய வழித்தடங்கள் பற்பலவும் நீந்திய தன்மையாய்க்
கடந்து, ஒலிக்கும் வண்டுக் கூட்டம் மலர் மொட்டுக்களில் மொய்க்கும்
குளிர்ந்த தேனினோடு குளிர்ந்த காட்டினுள், பகலவன் சாய்ந்து கடலுள்
பாய்ந்ததுபோல் போய்ச் சேர்ந்தனர்.
|