|
இசையைப் பரவவிட்டு,
தம் பசுக் கூட்டங்களோடு மான் கூட்டங்கள் கலந்து
குலாவ நின்ற முல்லை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
| 98 |
கரவ நெஞ்சுணர்
காமமோர் மூரலே
பரவக் காட்டின பான்மையி லங்கணிற்
குரவ நீண்டகு டங்கைக ரந்தபூ
விரவ நக்கமுல் லைவிரை காட்டுமால். |
| |
கரவ நெஞ்சு உணர்
காமம் ஓர் மூரலே
பரவக் காட்டின பான்மையில், அங்கணில்
குரவம் நீண்ட குடங்கை கரந்த பூ,
விரவ நக்க முல்லை, விரை காட்டும் ஆல |
மறைவாக
ஒருத்தி தன் மனத்துள் உணர்ந்த காமத்தை ஒரு புன்னகை
பரவக் காட்டின தன்மை போல், பரவலாகச் சிரித்தாற் போல் மலர்ந்த
முல்லைக் கொடி, பேரீச்சையின் உள்ளங்கை போன்ற மடலுக்குள்ளே
மறைந்து கிடந்த தன் பூக்களை, அவற்றின் மணத்தால் காட்டி விடும்.
| 99 |
முகைய ணிந்தளி
மொய்புவி கூந்தலின்
வகைய ணிந்தமுல் லைப்பினர் மற்றதன்
றகைய யணிந்தமு கந்தகும் யூதர்தந்
திகைய ணிந்தசி லம்பெதி ரெய்தினார். |
| |
முகை அணிந்து
அளி மொய் புவி கூந்தலின்
வகை அணிந்த முல்லைப் பினர், மற்று அதன்
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம்
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார். |
அரும்புகளை
அணிந்து வண்டுகள் மொய்க்கும் நிலமகளின்
கூந்தல்போல் அழகுடன் விளங்கிய முல்லை நிலத்தைக் கடந்தபின், அதற்கு
ஏற்ப அழகுடன் விளங்கிய முகம் என்னத்தக்க யூதரின் நாட்டில் அழகுடன்
விளங்கிய மலையின் எதிரே மூவரும் சென்று சேர்ந்தனர்.
திகை
- திசை என்பதன் போலி; இங்கு நாட்டுக்கு ஆகி வந்தது.
|