| 100 |
புக்க யாவரும்
போக்கரி தாயெழில்
தக்க தோர்பொழிற் சாய்ந்தடி நோயற
மிக்க தேன்றுளி செய்நளிர் மேவிவந்
தொக்க வெண்மண றிண்ணையி லோங்கினார். |
| |
புக்க யாவரும்
போக்கு அரிதாய், எழில்
தக்கது ஓர் பொழில், சாய்ந்து அடி நோய் அற,
மிக்க தேன்துளி செய் நளிர் மேவி வந்து,
ஒக்க வெண்மணல் திண்ணையில் ஓங்கினார். |
உள்ளே
புகுந்த யாவரும் வெளியே போக மனம் கொள்வதற்கு
அரிதான வண்ணம், தன் அழகினால் தகுதி வாய்ந்த ஒரு சோலையில்,
நடந்த கால்களின் நோவு நீங்குமாறு மெதுவாகச் சென்று, மிகுதியான
தேனைத் துளிக்கும் அதன் குளிர்ச்சியை விரும்பி வந்து, வெண்மணல்
பரந்த திண்ணை போன்ற மேட்டில் மூவரும் ஒன்றாக அமர்ந்து
விளங்கினர்.
நகுலன்
வரலாறு
-
விளம், - விளம், மா, கூவிளம்
| 101 |
பொதிர்தரும்
பூந்தருப் பொலிந்து நாறியாங்
கெதிர்தரு மோரிய மென்னும் வெற்புகண்
டுதிர்தரு மலர்மது வொப்பக் கண்ணினீர்
கதிர்தரு முகத்துக விளவல் காட்டினான். |
| |
பொதிர் தரும்
பூந்தரு பொலிந்து நாறி, ஆங்கு,
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு
உதிர் தரும் மலர் மது ஒப்பக் கண்ணின் நீர்,
கதிர் தரும் முகத்து, உக, இளவல் காட்டினான். |
அவ்விடத்து
அமர்ந்து, நெருங்கிய மலர் மரங்களோடு விளங்கி மணம்
பரப்பி எதிரில் அமைந்த மோரியம் என்னும் மலையைக் கண்டு, கதிரொளி
வீசும் தன்முகத்தில், மலர்களினின்று உதிரும் தேனைப் போலக் கண்ணீர்
சொரிய, சிறுவன் இயேசு அம்மலையைக் காட்டினான்.
|