| 102 |
தீயுமி ழுலையிலங்
கோதை தீந்தென
நோயுமிழ் நீரென நுதலி நொந்ததாய்
வீயுமிழ் தேனினும் விழைந்த தீஞ்சொலாய்
நீயுமிழ் நீருக நிலைமை யாதென்றாள். |
| |
தீ உமிழ் உலையில்
அம் கோதை தீந்து என,
நோய் உமிழ் நீர் என நுதலி, நொந்த தாய்,
"வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய்,
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது?" என்றாள். |
அது
தன் துன்பத்தை அவன் வெளிப்படுத்தும் கண்ணீரென்று கருதி,
நெருப்பை உமிழும் அடுப்பில் அழகிய மாலை தீய்ந்ததுபோல் நொந்த தாய்,
மகனை நோக்கி, "மலர்கள் பொழியும் தேனினும் விரும்பத்தக்க இனிய
சொல்லை உடையவனே, இவ்வாறு வெளிப்படும் கண்ணீரை நீ சொரிய
ஏற்பட்ட நிலைமை யாது?" என்றாள்.
| 103 |
மின்னிய
கார்குழல் தாங்கி வீழ்புனல்
துன்னிய கலையெனச் சூட்டி யாங்கெதிர்
கன்னிய திருமலை காண்மி னம்மலை
யுன்னிய திறத்தழு துயிர்நொந் தேனென்றான். |
| |
"மின்னிய கார்
குழல் தாங்கி, வீழ் புனல்
துன்னிய கலை எனச் சூட்டி, ஆங்கு எதிர்
கன்னிய திரு மலை காண்மின்; அம்மலை
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன்" என்றான். |
அது
கேட்ட திருமகன், "மின்னிய கருமேகத்தைக் கூந்தலாகத் தாங்கி,
பாய்ந்து விழும் அருவி நீரைப் பொருந்திய ஆடையாக அணிந்து, அங்கே
நம் எதிரேயுள்ள அழிவற்ற திருமலையைப் பாருங்கள்; அம்மலையை
நினைந்த அளவிலே நான் அழுது உயிர்நொந்தேன்" என்றான்.
| 104 |
நொய்யவாய்
மதுமலர் நொதுத்த கோலினான்
வெய்யவாய் முகிறவழ் வெற்பில் யாதென
வுய்யவாய் நமக்கிட வுதித்த நாயகன்
செய்யவா யம்புயந் திறந்து செப்பினான். |
|