பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 53

தாயர் ஓதையும், மடிதரும் பல தனயர் ஓதையும், உதிரமே
பாயல் ஓதையும், வதை செயும் பல படைகள் ஓதையும், மறம் மலி
தீயர் ஓதையும் இனைவரும் பல திசையில் ஓதையும், வெருவு உறும்
தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா.


      அங்கே மகவைப் பறிகொடுத்த தாய்மாரின் ஓசையும், மடியும் பல
புதல்வர்களின் ஓசையும், உதிரம் பாய்ந்தோடும் ஓசையும், வதை செய்கின்ற
பல படைக்கலங்களின் ஓசையும், கொடுமை நிறைந்த தீய படை வீரரின்
ஓசையும், துன்புற்றுப் புலம்புவதனால் பல திசைகளிலிருந்தும் எழும்
ஓசையும், இவற்றைக் கண்டு நடுங்கும் தூயவர்களின் ஓசையும் ஒன்றாகச்
சேர்ந்து, இடியிலும் கடலிலும் பொருந்தி எழும் ஓசையும் ஒன்று கூடினாலும்
இணையாக மாட்டா.

                    குழந்தைகள் நற்பேறு

      - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                 85
வெவ்வினை விதைத்த காலை
     வினைவினை வாகுந் தன்மை
மைவ்வினை யுணர்ந்த தீய
     மன்னனித் திறத்திற் செய்த
வவ்வினை நினைத்து நிந்தை
     யனைவரு முரைப்ப தல்லாற்
செவ்வினை யுளத்து வந்த
     திருமகன் விளிந்தான் கொல்லோ.
 
வெவ் வினை விதைத்த காலை வினை விளைவாகும் தன்மை,
மை வினை உணர்ந்த தீய மன்னன் இத்திறத்திற் செய்த
அவ்வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால்,
செவ் வினை உளத்து வந்த திரு மகன் விளிந்தான் கொல்லோ?