பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 54

      தீ வினையை விதைத்தபோது தீமையே விளையும் தன்மைபோல்,
குற்றமான செயலைக் கருதிய தீய மன்னன் எரோதன் இவ்வாறெல்லாம்
செய்த அச்செயலை நினைத்து அனைவரும் அவனை நிந்தித்து உரைப்பதே
பயனாகக் கொண்டதல்லாமல், நல்வினை செய்யும் உள்ளத்தோடு
அவதரித்து வந்த தெய்வ திருமகன் கொலையுண்டு இறந்தானோ? இல்லை.


 
               86
தேனுகு மெசித்து நாட்டிற்
     சேர்ந்துறை நாத னங்கண்
மீனுரு முடியிற் றாயும்
     வெண்மலர் வளனுங் காண
வூனுகு கொலையின் றன்மை
     யுளம்பனித் தெஞ்சச் காட்டி
வானுகு நிறையை நீத்தார்
     வழுக்கது காண்மி னென்றான்.
 
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண்
மீன் உகு முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண
ஊன் உகு கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்சக் காட்டி,
''வான் உகு நிறையை நீத்தார் வழுக்கு அது காண்மின்!'' என்றான்.

      தேன் சிந்தும் எசித்து நாட்டை அடைந்து தங்கியிருந்த குழந்தை
நாதன், அங்கு விண்மீன்கள் ஒளி வீசும் முடியை அணிந்த தாய் மரியன்னையும் வெள்ளிய இலீலி மலர்க் கொடி தாங்கிய வளன் எனும்
சூசையும் காணுமாறு குழந்தைகளின் ஊன் உதிர்ந்து விழுகின்ற கொலையின்
தன்மையை உள்ளம் தளர்ந்து மெலியுமாறு காட்டி, ''வானினின்று
அருளப்பட்ட ஒழுக்கத்தைக் கைவிட்டவரின் தீய போக்கைப் பாருங்கள்!''
என்றான்.

 
                   87
போர்முகத் தொன்னார் மார்பிற்
     புதைத்தவே லுயிர்சால் புண்ணுஞ்
சீர்முகத் தவன்றன் னாட்டிற்
     சிந்திய குருதி யோட