வேர்முகத்
தொருமா சில்லா
விளைஞரைக்
கொல்லுந் தன்மை
பார்முகத் திணையாத் தீமை
பார்த்துளத்
திரங்கி நொந்தார். |
|
போர்முகத்து
ஒன்னார் மார்பில் புதைத்த வேல் உயிர் சால்பு உண்ணும்
சீர்முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரைக் கொல்லும் தன்மை,
பார் முகத்து இணையாத் தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார். |
போர்க்
களத்தில் பகைவரது மார்பிற் செலுத்திய வேல்
அவர்களுடைய உயிரைத் தப்பாது குடிக்கும். அவ்வாறிருக்க இம்
மன்னனோ தன் நாட்டில் அழகிய முகமுள்ள ஒரு மாசும் இல்லாத
சிறுவரைக் குருதி சிந்தி ஓடும் வண்ணம் கொன்றான். இது உலகில் ஒப்புக்
கூற இயலாத தீமை. இதைக் கண்டு மரியாளும் வளனும் மனத்துள் இரங்கி
வருந்தினர்.
88 |
கடலுடைத்
தரணி யாவுங்
களித்தினி
தெழவீங் குற்ற
வுடலுடைக் கடவு டன்னை
யொழிக்குப்
பகைத்த கோமா
னடலுடைத் தன்னா டெஞ்ச
லடைபெரும்
பயனோ நாதன்
மிடலுடைத் திறத்தி லென்னா
மேவலர்
சூட்சி யென்றார். |
|
''கடல்
உடைத் தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற
உடல் உடைக் கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான்
அடல் உடைத் தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ? நாதன்
மிடல் உடைத் திறத்தில் என் ஆம் மேவலர் சூட்சி?'' என்றார். |
|