| 108 |
நாகமே லேறினர்
நாதற் கப்பலி
யாகமே லிருவரோர் பீட மாக்கினர்
வேகவேல் விறகழல் மெய்ய னேந்துபு
சாகவே பலியெவ ணென்று சாற்றினான். |
| |
"நாக
மேல் ஏறினர், நாதற்கு அப் பலி
ஆக, மேல், இருவர், ஓர் பீடம்
ஆக்கினர்.
வேக, வேல் விறகு அழல் மெய்யன்
ஏந்துபு,
'சாகவே பலி எவண்?' என்று
சாற்றினான். |
"அவ்விருவரும்
அம் மலை மேல் ஏறினர்; அதன் மேல்,
ஆண்டவனுக்கு அப் பலி நிறைவேறுமாறு ஒரு பீடமும் அமைத்தனர். அப்
பலிப் பொருள் வேகுமாறு, வாளும் விறகும் நெருப்பும் மெய்யனாகிய
நகுலன் ஏந்தி நின்று, 'சாவதற்குரிய பலிப்பொருள் எங்கே உள்ளது?' என்று
தந்தையை கேட்டான்.
ஆயுத
ஒப்புமை பற்றி வாள், வேல் எனப்பட்டது.
| 109 |
பொன்னையே
காட்டிய தழலைப் போன்றுநோய்
தன்னையே காட்டிய தரும னிப்பலிக்
குன்னையே காட்டின னென்று டைப்பிதா
மின்னையே காட்டிய மகனை விள்ளினான். |
| |
|
"'பொன்னையே
காட்டிய தழலைப் போன்று, நோய்
தன்னையே காட்டிய தருமன்,
இப் பலிக்கு
உன்னையே காட்டினன்' என்று
உடைப் பிதா,
மின்னையே காட்டிய மகனை
விள்ளினான்.
|
"அவனுடைய
தந்தை, 'பொன்னின் நலத்தைக் காட்டும் நெருப்பைப்
போன்று, துன்பத்தை அன்பருக்குக் காட்டும் இயல்புள்ள நீதி வாய்ந்த
கடவுள், இப் பலிக்கு உன்னையே பொருளாகக் காட்டினான்' என்று கூறி
மின்னலுக்கு நிகராக விளங்கிய மகனைத் தழுவிக் கொண்டான்.
|