| 112 |
"செவ்விய
திருவுள மென்று தேறியுள்
ளவ்விய மறுத்தரி தோங்கு மாபிறாங்
கவ்விய சிகைத்தலை கவிழ்ந்து வீழ்ந்தற
வவ்விய வாட்கொடு மகனை வீசினான். |
| |
'செவ்விய திரு
உளம் என்று தேறி, உள்
அவ்வியம் அறுத்து, அரிது ஓங்கும் ஆபிறாம்,
கவ்விய சிகைத்தலை கவிழ்ந்து வீழ்ந்து அற,
வவ்விய வாள் கொடு மகனை வீசினான். |
"தன்
மனத்துள் பொறாமையை விலக்கி, அரிய தன்மையாய் உயர்ந்து
விளங்கும் ஆபிறாம், அது இறைவனின் செவ்வையான திருவுளம் என்று
தேறி, பற்றிப் பிடித்த குடுமித்தலை அறுந்து கவிழ்ந்து தரையில் விழுமாறு,
தன் கையிற் பற்றிய வாளைக் கொண்டு அம்மகன் மீது வீசினான்.
'கவிழ்ந்து
வீழ்ந்து அற' என்பதனை, 'அறுந்து கவிழ்ந்து வீழ' என
மாற்றிக் கூட்டுக.
| 113 |
வீசின வாளொடு
வினைக்கை தாங்குபு
கூசின வுலகெலாங் களிப்பக் கோதறுத்
தேசில மகிழ்வுற லிருவர் சால்பென
வாசியை யிறைவனன் றளவி னங்கினான். |
| |
"வீசின வாளொடு
வினைக் கை தாங்குபு,
கூசின உலகு எலாம் களிப்ப, கோது அறுத்து,
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என,
ஆசியை இறைவன் அன்று அளவு இல் நல்கினான். |
"இதனால்
வருந்திய உலகமெல்லாம் கண்டு களிக்குமாறு, வீசின
வாளோடு அச்செயலுக்கு முற்பட்ட கையையும் தடுத்து, இகழ்ச்சி இல்லாத
மகிழ்ச்சியை அடைதல் அவ்விருவருக்கும் தகுமென்றாற் போல், நிகழ
விருந்த குறையை விலக்கி, தன் ஆசியை ஆண்டவன் அன்று அளவில்லாது
வழங்கினான்.
|