| 114 |
மன்னுயி ரளிப்பநான்
மற்றொர் வெற்புமே
லென்னுயி ரளிப்பலென் றிவையங் காயவே
பின்னுயி ரளிக்குங்கால் பெற்ற லாதெனக்
கின்னுயி ரிலையென வழுதி யம்பினான். |
| |
"மன்
உயிர் அளிப்ப, நான் மற்று ஒர் வெற்பு மேல்
என் உயிர் அளிப்பல் என்று, இவை அங்கு ஆயவே,
பின் உயிர் அளிக்கும் கால் பெற்று அலாது எனக்கு
இன் உயிர் இலை" என அழுது இயம்பினான். |
"மனித
உயிர்களை மீட்டுக் காக்கும் பொருட்டு, நான் மற்றொரு
மலையின் மேல் என் உயிரைக் கொடுப்பேன் என்பதற்கு அடையாளமாக,
இவை எல்லாம் அங்கு நிகழ்ந்தன. என்னைப் பொறுத்த வரையில், பின்
நான் என் உயிரைக் கொடுக்குங் காலத்து அதனை மீண்டும் பெற்றுக்
கொள்ளும் அவ்வுயிரே எனக்கு உயிரல்லாமல், இனிய உயிர் வேறு எனக்கு
இல்லை" என்று திருமகன் வருந்திக் கூறினான்.
வானவர்
காட்டிய சிலுவை
-
காய், - - காய், - - காய், - - காய்
| 115 |
கரைகொன்ற
தயைகண்டு கலுழ்ந்திரங்கித் தவத்திறைவன்
புரைகொன்ற வவ்விருவர் புணர்துணிவே சால்பென்றால்
நிரைகொன்ற மன்னுயிர்க ணீயளிப்ப விறப்பானேன்
றிரைகொன்ற வருள்விளைக்குந் திருவல்லோ யென்றழுதான். |
| |
கரை கொன்ற
தயை கண்டு, கலுழ்ந்து இரங்கி, தவத்து இறைவன்,
"புரை கொன்ற அவ் இருவர் புணர் துணிவே சால்பு என்றால்,
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன்,
திரை கொன்ற அருள் விளைக்கும் திரு வல்லோய்?" என்று அழுதான். |
தவத்தலைவனாகிய
சூசை, திருமகனின் கரையில்லாத கருணையைக்
கண்டு, அழுது வருந்தி, "கடலையும் வென்ற கருணையை விளைவிக்கும்
|