|
கடலினின்று
எழுந்த ஞாயிறுபோல் அங்கு எழும் மகனாகிய தம்
உயிர் பிரிந்து செல்லவே, இலைகள் செறிந்த மலர்க் கொடி ஏந்திய உயர்
தவத்தோனாகிய சூசையும், தாயாகிய மரியாளும், கொலையால் உயிர்
நீங்கிய வெறும் உடம்புபோல், பேச்சும் இல்லாது, அசைவும் இல்லாது
அழுது, அடுப்பில் உதித்த நெருப்பில் உருகும் சித்திரங்கள் போல
நின்றனர்.
| 122 |
அழுதன்னார்
துயர்நோக்கி யருட்கடலோன் மீண்டிறங்கி
முழுதன்னா ருவப்பவொரு மூரலையிட் டியங்கவெனத்
தொழுதன்னார் தடங்கொண்டு துதிபாடி நெடும்வழிபோய்ப்
பழுதன்னார் மனத்தினிருள் பாய்சுரஞ்செல் வெற்படைந்தார். |
| |
அழுத அன்னார்
துயர் நோக்கி, அருள் கடலோன் மீண்டு இறங்கி,
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு, "இயங்க" என,
தொழுது அன்னார், தடம் கொண்டு, துதி பாடி, நெடும் வழி போய்,
பழுது அன்னார் மனத்தின் இருள் பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார். |
அழுத
அவர்கள் துயரத்தைக் கண்டு, கருணைக் கடலாகிய
திருமகன் மீண்டும் கீழே இறங்கிவந்து, அவர்கள் முற்றிலும் மகிழுமாறு ஒரு
புன்னகை காட்டி, "இங்கிருந்து நடப்போம்" என்று கூறவே, அவர்கள்
அவனைத் தொழுது துதி பாடியவண்ணம் தடம் பிடித்து நெடுந்தூரம் வழி
நடந்து போய், பாவமே உருவானவர் மனத்தைப் போல் இருள் பரவிய
அவ்வனம் சென்று சேரும் ஒரு மலையை அடைந்தனர்.
'அழுதன்னார்'
என்பது தொகுத்தல் விகாரம்.
மலை
வேடர்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 123 |
தூசனை மின்னி
யாடுந் துளிமுகில் தவழ்ந்து சூழக்
காசனை முகைத்த சாந்தங் கவந்தநீண் டிமிசு பூத்துப்
பூசனை யெனக்கற் பூரம் புழுகுட னான மற்ற
தோசனை கமழக் குன்றத் துதயமே லேறி னாரே. |
|