தூசு அனை மின்னி
ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ,
காசு அனை முகைத்த சாந்தம் கலந்த நீண் திமிசு பூத்து,
பூசனை எனக் கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது
ஓசனை கமழ் அக் குன்றத்து உதய மேல் ஏறினாரே. |
ஆடை
போல் மின்னி அசையும் துளி கொண்ட மேகம் தவழ்ந்து
கவியவும், மணிகள் போல் அரும்பிய சந்தன மரங்களோடு கலந்த நெடிய
வேங்கை மரங்களும் பூத்து, வழிபாடு நிகழ்தல் போல் கற்பூரமும் புனுகோடு
கஸ்தூரியும் பிறவும் ஒரு யோசனை தூரம் மணம் பரப்பும் அக்குன்றத்தின்
மீது மூவரும் உதய நேரத்தில் ஏறிச் சென்றனர்.
| 124 |
சால்வளர்
முகிலின் வேழஞ் சந்தன மேய்ந்து சீற
வால்வளர் கலாப நீட்டி மயிலின முலவி யால
நூல்வளர் கலனிற்றூங்கி நுரைவள ரருவி யோடக்
கால்வள ருழைகள் பாயக் காவத மொலிக்குங் குன்றே. |
| |
சால் வளர் முகிலின்
வேழம் சந்தனம் மேய்ந்து சீற,
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல,
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட,
கால் வளர் உழைகள் பாயக் காவதம் ஒலிக்கும் குன்றே. |
மிக
வளர்ந்த கருமேகம் போல் யானைகள் சந்தனந் தழைகளை
மேய்ந்து பிளிறவும், வாலென வளர்ந்த தோகையை நீட்டிக் கொண்டு மயில்
கூட்டங்கள் உலாவி ஒலிக்கவும், நூலிற் கோத்த அணிகலன் போல் தொங்கி
நுரையோடு கூடிய அருவி பாய்ந் தோடவும், வளர்ந்த கால்களைக் கொண்ட
மான்கள் துள்ளிப் பாயவுமாக அக் குன்று ஒரு காத தூரத்திற்கு ஒலிக்கும்.
| 125 |
வருக்கையின்
கனிக டோறும் வானர முலவிப் பாயச்
செருக்கையின் குருதி போலச் சிந்துதேன் பெருக்கிற் றோடிப்
பருக்கையின் விளங்குந் தெண்ணீர் பரப்புமா றிடத்திட் டேகித்
தருக்கையின் வனைந்த மாலைச் சாரல்கண் போயி னாரே. |
|