வருக்கையின்
கனிகள் தோறும் வானரம் உலவிப் பாய,
செருக் கையின் குருதி போலச் சிந்து தேன் பெருக்கு உற்று ஓடி
பருக்கையின் விளங்கும் தெண் நீர் பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி
தருக் கையின் வனைந்த மாலைச் சாரல்கண் போயினாரே. |
பலாக்
கனிகள் தோறும் குரங்குகள் பாய்ந்து உலாவவும், போரிடத்துச்
சிந்தும் இரத்தம் போலச் சிந்தும் தேனோடு பெருக் கெடுத்து ஓடி, பளிங்கு
போல் விளங்கும் தெளிந்த நீரைப் பரப்பி ஓடும் ஆற்றைத் தமக்கு
இடற்புறமாக விட்டுச் சென்று, மரங்கள் தம் கிளைகளில் கட்டியமைத்த
மாலைகள் போல் மலர்களைத் தாங்கி நிற்கும் மலைச் சாரல் வழியாக
மூவரும் போயினர்.
| 126 |
சண்பக மலர்ந்த
சோலை சந்தன நிழற்றுஞ் சோலை
விண்பக லொளிப்பச் சூழ்ந்து விழைந்திவ ரெவரும் பேணு
நண்பக மலிதல் போல நாண்மலர் பொதுளும் வாவி
யொண்பக னெற்றி போகி லொத்தொளிர் மூவர் போனார். |
| |
சண்பகம் மலர்ந்த
சோலை சந்தனம் நிழற்றும் சோலை
விண்பகல் ஒளிப்பச் சூழ்ந்து, விழைந்து இவர் எவரும் பேணும்
நண்பு அகம் மலிதல் போல, நாள் மலர் பொதுளும் வாவி,
ஒண்பகல் நெற்றி போகில் ஒத்து ஒளிர் மூவர் போனார். |
சண்பக
மரங்கள் மலர்ந்த சோலையும், சந்தன மரங்கள் நிழல் தரும்
சோலையும் வானத்துப் பகலவனை மறைக்குமாறு சூழக் கொண்டு,
விருப்பத்தோடு இவர்கள் யாவரையும் பேணும் தம் நட்புள்ளம் சிறத்தல்
போல், புதுமலர்கள் செறிந்து கிடக்கும் தடாகத்தை அடுத்து, ஒளி
பொருந்திய கதிரவன் உச்சியை அடைந்த வேளையில், அக்கதிரவனைப்
போன்று விளங்கும் மூவரும் சென்றனர்.
| 127 |
விண்முழு திறைஞ்சுந்
தக்கோர் விரிகரை வதிந்த போழ்திற்
பண்முழு தொழிக்குந் தீம்பாப் பறவைசூ ழிமிழிற் பாட
மண்முழு தன்றி வானு மாற்றரும் வனப்புக் காணக்
கண்முழு துடம்புற் றன்ன கயமெலாம் பூத்த தன்றோ. |
|