| 129 |
சூழகத் தன்பு
காட்டச் சூசைவந் தவரை நோக்கி
வாழகத் தெவரிக் குன்றில் வைகுநீ ரென்று கேட்பக்
காழகச் சேற்றுட் டீம்பால் கலந்தென நரைகொள் மூப்பன்
மேழகக் குரலிற் சொன்னான் வெண்மண றிண்ணை சேர்ந்தே. |
| |
சூழ் அகத்து அன்பு
காட்ட, சூசை, வந்தவரை நோக்கி,
"வாழ் அகத்து, எவர், இக்குன்றில் வைகும் நீர்?" என்று கேட்ப,
காழகச் சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன்
மேழகக் குரலில் சொன்னான், வெண் மணல் திண்ணை சேர்ந்தே: |
சூசை,
தன் மனத்துப் பொருந்திய அன்பை வெளியே காட்டும்
நோக்கத்தோடு, அங்கு வந்த அவர்களை நோக்கி, "வாழும் இடமாகக்
கொண்டு இம்மலையில் தங்கும் நீர் யார்?" என்று வினவ, கரிய சேற்றினுள்
இனிய பால் கலந்தது போல நரை கொண்ட முதியவன் ஒருவன்,
அவர்களோடு ஒரு வெண்மணல் மேட்டை அடைந்து, ஆட்டுக் கிடாய்க்
குரலில் பின்வருமாறு கூறத் தொடங்கினான்:
| 130 |
களித்தன
முகத்திற் பொய்யாக் கனிகடந் தெழுமிக் குன்றத்
தொளித்தன மக்க பேயர்க் குதவிய குலத்தி னாரைத்
துளித்தன மதுவிற் றண்ணஞ் சுள்ளியி னிழற்கீழ் சாய்ந்தாண்
டளித்தன தலைவ னானே யவிர்முகத் திரவி போன்றீர். |
| |
"களித்தன முகத்தின்
பொய்யாக் கனிகள் தந்து எழும் இக் குன்றத்து
ஒளித்தன மக்கபேயர்க்கு உதவிய குலத்தினாரை,
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு
அளித்தன தலைவன் நானே, அவிர் முகத்து இரவி போன்றீர்! |
"ஒளிரும்
முகத்தால் கதிரவனைப் போன்றவர்களே, மகிழ்ந்த
முகம்போல் என்றும் தவறாமல் கிடைக்கும் கனி வகைகளைத் தந்து
உயர்ந்து
|