|
நிற்கும் இம்மலையில்
வந்து ஒளித்திருந்த மக்கபேயர்க்கு உதவிய இவ்
வேடர் குலத்தவரை, துளியாகப் பொழிந்த தேனோடு குளிர்ச்சியும் அழகும்
கொண்ட மருத மரத்தின் நிழலில் அமர்ந்து ஆண்டு காத்த தலைவன்
நானே.
"மக்கபேயர்
ஆரெனில், யூதருள் ஒரு குலத்தார் என்க" என்பது
பழைய உரை அடிக் குறிப்பு. இவ் வேடர் செய்தி 2 மக்கபேயர் 10ஆம்
அதி. காண்க.
| 131 |
பாங்கொளித்
துணர்விட் டோங்கும் படர்ந்தபற் காவு கவ்வி
யாங்கொளித் தலர்ந்த பொய்கை யடுத்தகல் பரப்பு நோக்கீ
ரீங்கொளித் துளத்தி லோங்கி யெதிர்பகை செகுத்துப்
பின்னாள் வீங்கொளித் தடக்கை வீரர் வென்றன விடம தாமே. |
| |
"பாங்கு, ஒளித்
துணர் விட்டு ஓங்கும் படர்ந்த பல் காவு கவ்வி,
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை அடுத்து, அகல் பரப்பு நோக்கீர்;
ஈங்கு ஒளித்து, உளத்தில் ஓங்கி, எதிர் பகை செகுத்து, பின் நாள்,
வீங்கு ஒளித் தடக் கை வீரர் வென்றன இடம் அது ஆமே. |
"பக்கத்தே,
ஒளி பொருந்திய பூங்கொத்துகள் அணிந்து உயர்ந்து
படர்ந்த பல சோலைகள் செறிந்து, அவ்விடத்து மறைந்து மலர்ந்த
தடாகத்தை அடுத்து, அகன்று கிடக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள்;
இவ்விடத்தில் ஒளிந்திருந்து, மன எழுச்சி பெற்று, பிற்காலத்தில், எதிரே
சென்று பகைவரை அழித்து, ஒளி பெருகும் பெரிய கைகளைக் கொண்ட
அவ்வீரர் வெற்றி கண்ட இடமாகும் அது.
| 132 |
வானினின்
றிழிந்த வாளால் மன்னவன் பொருங்கால் வான்றன்
பானினின் றிழிந்த வில்போற் படர்சுடர் செயப்பாய் மாமேன்
மேனிநின் றிழிந்த கற்றை விண்ணவ ரைவர் வில்லா
லூனினின் றிழிந்த செந்நீ ருகக்கடற் படையை வென்றார். |
|