"வானில் நின்று
இழிந்த வாளால் மன்னவன் பொருங்கால், வான்தன்
பானில் நின்று இழிந்த வில் போல் படர் சுடர் செய, பாய்மா மேல்,
மேனி நின்று இழிந்த கற்றை, விண்ணவர் ஐவர், வில்லால்,
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக, கடல் படையை, வென்றார். |
"வானத்திலிருந்து
இறங்கி வந்து தனக்குக் கிடைத்த வாளைக் கொண்டு
மக்க பேய மன்னன் போர் செய்து கொண்டிருந்த வேளையில், தம்
உடலிலிருந்து பொழிந்த கதிர்க் கற்றை விண்ணிலுள்ள கதிரவனிலிருந்து
பொழிந்த கதிர்போல் படர்ந்த ஒளியைப் பரப்பிய வண்ணம், வானவர் ஐவர்,
குதிரைமேல் நின்று கொண்டு, கடல் போன்ற பகைவர் படையை,
அப்பகைவர் உடலினின்று பொழிந்த இரத்தம் சிந்திப் பரவ, தம் வில்லினால்
வென்றனர்.
| 133 |
பன்னிய படலை
யாய்மேற் பண்பெலா மடைந்த நாதற்
றுன்னிய காலை துன்னா தோன்றிய வரிதொன் துண்டோ
கன்னிய குலத்தோ ரேற்றுங் கடவுளைப் பணிந்த போழ்தே
பின்னிய முறையா லிங்கட் பிணிகளும் பெறலே தென்றான். |
| |
"பன்னிய படலையாய்,
மேல் பண்பு எலாம் அடைந்த நாதன்
துன்னிய காலை, துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ?
கன்னிய குலத்தோர் ஏற்றும் கடவுளைப் பணிந்த போழ்தே,
பின்னிய முறையால் இங்கண் பிணிகள் நாம் பெறல் ஏது?" என்றான். |
"நெருங்கத்
தொடுத்த படலை மாலை போல், மேலான
பண்புகளெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள ஆண்டவனை அண்டிய
விடத்து, அடைய இயலாததாய்த் தோன்றிய அரிய செயல் ஒன்றேனும்
உண்டோ? ஆயினும், அழியாத் தன்மை கொண்ட யூத குலத்தோர்
போற்றும் கடவுளை நாங்கள் வணங்கத் தொடங்கிய காலந்தொட்டே
எங்களோடு பின்னிக் கொண்டாற்போல் விடாத துன்பங்களை நாங்கள்
இங்கு அடையக் காரணம் ஏது?" என்றான்.
|