"சலத்து எலா
நிலையும் ஒன்றோ? தருக்கு எலாம் கனியும் ஒன்றோ?
நிலத்து எலாம் விளைவும் ஒன்றோ? நிலை பல நமக்கும் உண்டு ஆய்,
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழுந்தகவு அறத்தின் மாட்சி
புலத்து எலாம் ஒல்லும். ஒல்லின், பொருள் இலாக்குறை ஒன்று உண்டோ? |
"நீர்நிலை
எல்லாம் ஒரே இயல்போ? மரங்களுக்கெல்லாம் பழம் ஒரே
வகையோ? நிலங்களிலெல்லாம் விளைச்சல் ஒரே தன்மையதோ? இவை
போலவே, நமக்கும் நிலைகள் பல வகையாய் இருப்பினும்,
குலங்களுக்கெல்லாம் பொதுவாய் நிற்கும் செழுமையான தகுதியுடைய
அறத்தின் மாண்பொவேனில், எல்லா நிலைமைகளிலும் பொருந்த வந்து
அமைவதாகும். அது ஒன்று மட்டும் பொருந்துமாயின், பொருள் இல்லாக்
குறை ஒரு குறையாகுமோ?
| 136 |
கார்முகத்
தலரு முல்லை கதிர்முகத் தலருங் கஞ்சஞ்
சீர்முகத் தலரு நெஞ்சிற் சிலர்துணிந் தறத்தைச் செய்வார்
சூர்முகத் தலரு மூக்கத் துணிவொடு சிலரே நோற்பார்
பார்முகத் தாசொன் றல்லாற் பயன்படா தில்லை யொன்றே. |
| |
"கார்முகத்து
அலரும் முல்லை, கதிர் முகத்து அலரும் கஞ்சம்
சீர்முகத்து அலரும் நெஞ்சின் சிலர் துணிந்து அறத்தைச் செய்வார்.
சூர்முகத்து அலரும் ஊக்கத் துணிவொடு சிலரே நோற்பார்.
பார்முகத்து ஆசு ஒன்று அல்லால், பயன்படாது இல்லை ஒன்றே. |
"முல்லை
கார்காலத்தில் மலரும். தாமரையோ பகலவனைக் கண்டு
மலரும். இவை போலவே, செல்வம் படைத்தவிடத்து மலரும்
நெஞ்சத்தோடும் சிலர் துணிந்து அறம் செய்வர். துன்பத்தினிடையேயும்,
மலர்ந்து வரும் ஊக்கத்தாற் கொண்ட துணிவோடு சிலரே தவஞ் செய்ய
முற்படுவர். ஆதலால், இம்மண்ணுலகில் பாவம் ஒன்றைத் தவிர,
பயன்படாதது என்று ஒன்றும் இல்லை.
|