பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 547

                      137
மெய்மறந் துணர்வைக் கொல்லும் வெறிமது வுண்ணா கள்வைக்
கைமறந் தொழுகிக் காதற் கசடுறப் பொறிகள் காட்டும்
பொய்மறந் தின்னா தெல்லாம் போக்கிநல் லறமே பூண்டு
மைமறந் தவிர்ந்தீ ராகில் வானின்மேற் குலமாய் வாழ்வீர்.
 
"மெய் மறந்து உணர்வைக் கொல்லும் வெறி மது உண்ணா, கள்வைக்
கை மறந்து ஒழுகி, காதல் கசடு உறப் பொறிகள் காட்டும்
பொய் மறந்து, இன்னாது எல்லாம் போக்கி, நல் அறமே பூண்டு,
மமைறம் தவிர்ந்தீர் ஆகில், வானில் மேல் குலமாய் வாழ்வீர்.

     "மெய்மறந்த தன்மையாய் உணர்வைக் கொல்லும் வெறியுள்ள
மதுவை உண்ணாமல், கையாற் களவு செய்தலை மறந்து நடந்து, ஆசையால்
பாவம் விளையுமாறு ஐம்பொறிகள் காட்டும் பொய்யான இன்பத்தை மறந்து,
தீமையானதெல்லாம் விலக்கி, நல்லறத்தையே கைக்கொண்டு, இருள் மயமான
கொடுமைகளை விட்டொழித்தீராயின், வானுலகில் மேற்குலத்தோராய்
வாழ்வீர்.

 
                     138
பிறந்தகால் குலமுஞ் செல்வப் பெற்றியுந் தெரிந்தா ருண்டோ
மறந்தகா தொழுகுஞ் சீரால் வான்றிருத் தகுவ தென்றே
யிறந்தகா லிங்கட் டேர்ந்த வியல்புட னெவரும் வாழ்வார்
சிறந்தகால் வேண்டின் வேண்டுந் தீதகன் றறத்தின் மாட்சி,
 
"பிறந்த கால் குலமும் செல்வப் பெற்றியும் தெரிந்தார் உண்டோ?
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே
இறந்த கால், இங்கண் தேர்ந்த இயல்புடன், எவரும், வாழ்வார்.
சிறந்த கால் வேண்டின், வேண்டும் தீது அகன்ற அறத்தின் மாட்சி.

     "பிறந்தபோதே, தமக்கெனக் குலமும் செல்வத் தகுதியும்
தெரிந்தெடுத்துக் கொண்டவர் உண்டோ? பாவத்தைச் சாராமல் அறநெறி
ஒழுகும் சிறப்பால் வானுலகச் செல்வம் வாய்ப்பது என்று கருதி, எவரும்,