பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 548

இவ்வுலகில் தாமே தெரிந்து கொண்ட இயல்புக்கு ஏற்ப, இறந்தபின்
வானுலகில் வாழ்வர். சிறந்த எதிர்கால வாழ்வு தமக்கு வேண்டுமாயின்,
தீமையை விலக்கிய அறத்தின் மாட்சி அமைந்திருத்தல் வேண்டும்.

      'அகன்றறம்' என்பது தொகுத்தல் விகாரம்.

 
                  139
வருணமே மக்கட் பேதம் வகுத்திடு மிங்க ணல்லா
லருணமே யிறந்த பின்ன ரவரவர் தமிழ்வே றாக்குங்
கருணமே திரியுங் குன்றிற் கடிதுறை நீரு மோர்ந்து
தருணமே காத்துச் சீலந் தவிர்கிலீ ரென்றான் சூசை.
 
"வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால்,
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும்.
கருணமே திரியும் குன்றில் கடிது உறை நீரும் ஓர்ந்து,
தருணமே காத்து, சீலம் தவிர்கிலீர்" என்றான் சூசை.

     "மக்கள் தமக்குள் வேறுபாடு வகுத்துக் காட்டும் சாதிமுறையெல்லாம்
இம்மண்ணுலகில் உள்ளதேயல்லாமல், இறந்தபின்னர், அவரவர் வேத ஞான
வாழ்வின்படி வாழ்ந்த வாழ்வே தமக்குள் வேற்றுமை ஆக்கிக் காட்டும்.
ஆதலால், யானைகள் அலையும் இம்மலையில் கடுமையான வாழ்க்கை
நடத்தும் நீங்களும் இதனை உணர்ந்து, காலத்தோடு ஐம்பொறிகளைக்
காத்து, ஒழுக்கம் தவறாதிருப்பீர்" என்றான் சூசை.

     ஆரணம் என்பது எதுகை பற்றி முதல் குறுகி ரகரம் ருகர மாகி அருணம் என நின்றது.

               மாதர்க்குத் திருமகன் அறிவுரை

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், -மா

 
               140
கழையிடைக் குளித்த தேன்வடிந் தென்னக்
     கனிந்திவை வளன்விதித் திடுங்கால்
தழையிடைக் குளித்த நீனிற மேனித்
     தையலார் பொருக்கென வோடிக்