'கூடும் ஓர் இணை
அற்று இலங்கும் நீ, ஐயா, கூ இடை வாடு இல
மலர் அல்லால்,
வாடும் ஓர் மலரும் அன்றி, ஈங்கு, உண்டோ மலர்?" என, ஒருத்தி
நக்கு உரைத்தாள். |
குழந்தையாய்
உருவெடுத்துத் தோன்றிய ஆண்டவன் அம்மாதரை
நோக்கி, "இதோ, நீங்கள் ஓடியதனால் விளையும் ஒரே பயன், வாடக்கூடிய
ஒரு வகை மலர்களைச் சேர்த்துக் கட்டிய படலை மாலையைக்
கொணரத்தானோ?" என்று சொல்லி நகைத்தான். அது கேட்ட ஒருத்தி,
"ஐயா, சொல்லக்கூடிய ஓர் ஒப்புமையின்றி விளங்கும் நீயே இவ்வுலகில்
வாடுதல் இல்லாத மலரல்லாமல், இங்கு, வாடும் இயல்புள்ள ஒரு வகை
மலரேயன்றி வேறு வகை மலரும் உண்டோ?" என்று சிரித்துச் சொன்னாள்.
| 142 |
கோடிய கொம்பிற்
பூவதோ படருங் கொடிமலர் தான்கொலோ
நீரி
லாடிய பூவோ வாடில மலரெங் காவதென் றறைதிநீ யென்றா
ளாடிய தவமென் றடவியிற் பூத்த வரியகற் பாதியே மற்றக்
கோடிய குறைதீர் சீலமே வாடாக் கொழுமல ராயின வென்றான். |
| |
"கோடிய கொம்பில்
பூ அதோ, படரும் கொடி மலர் தான் கொலோ,
நீரில்
ஆடிய பூவோ, வாடு இல மலர் எங்கு ஆவதென்று அறைதி நீ"
என்றாள்.
"ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே, மற்றக்
கோடிய குறை தீர் சீலமே வாடாக் கொழு மலர் ஆயின" என்றான். |
"அது
வளைந்த கொம்பில் மலரும் பூவோ? படர் கொடியிற் பூக்கும்
மலர் தானோ? நீரின் மேல் நிமிர்ந்து ஆடிய பூவோ? வாடாத மலர் எங்கே
உண்டாவதென்று நீயே சொல்" என்றாள் அவள். அவன், "கைக்கொண்ட
தவம் என்னும் காட்டில் பூத்த அரிய கற்பு என்னும் மலரை முதலாகக்
கொண்டு, மற்றும் கோணலான குறைகளெல்லாம் நீங்கிய நல்லொழுக்கத்தால்
விளையும் புண்ணியங்களே வாடுதல் இல்லாத செழுமையான மலர்கள்
ஆகும்" என்றான்.
|