| 143 |
காவிபட்
டொளிருங் கண்ணினார் காணி கற்பதே பளிங்கினு
நொய்தா
யாவிபட் டழுக்குற் றொழியுமென் றறைவா ரரியநூற்
புலமையா ரென்றா
ளாவிபட் டொழியுங் கற்பதே யாகி லாண்மைகொண்
டுறுதியே நிற்பக்
காவிபட் டொளிரு நீண்டகண் ணாதி காமினீ ரைந்தையு
மென்றான். |
| |
"'காவி பட்டு
ஒளிருங் கண்ணினார் காணி கற்பு; அதே,
பளிங்கினும்
நொய்தாய்,
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும்' என்று அறைவர் அரிய நூல்
புலமையோர்"
என்றாள்.
"ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில், ஆண்மை கொண்டு
உறுதியே
நிற்ப,
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி காமின் நீர் ஐந்தையும்"
என்றான். |
"அரிய
நூல்களைக் கற்றறிந்த புலவர், 'குவளைமலர் போன்று
ஒளிரும் கண்களைக் கொண்ட பெண்களுக்குக் கற்பே உரிமைச் சொத்து;
அதுவோ, பளிங்கைக் காட்டிலும் மெல்லியதாய், ஆவி பட்டாலுமே
அழுக்கடைந்து கெடும்' என்று கூறுவர் என்றாள் அவள். அவன், "கற்பு
ஆவி பட்டாலும் ஒழியும் அத்தன்மை கொண்டதாகில், வீரங் கொண்டு
அதனில் உறுதியாய் நிற்கும் வண்ணம், குவளை மலர் போன்று ஒளிரும்
நீண்ட கண் முதலிய ஐம்பொறிகளையும் காத்துக் கொள்ளுங்கள்" என்றான்.
'பளிங்கினும்
கொய்தாய், ஆவிபட்டு அழுக்குற் றொழியும்' என்ற
கருத்து 'துன்னியதோர் ஆவிபட, தூய பளிங்கு ஆசுறும்' என்று 6 : 4இல்
வந்தமை காண்க.
| 144 |
நகையெழ வெதிர்ந்த
வின்பமைம் பொறிக ணாடலிற்
காவலே யாற்றாப்
பகையெழ வைந்தும் பரமனே முன்னாட் படைத்தெமக்
களித்ததே தென்றாள்
பகையெழ முனிந்து பழுதுற வெவையும் பருகழ
லுமக்குவேண் டாதோ நகையெழ வுதவுந் திறத்தவை பேணி நவையுறா காமினீ
ரென்றான். |
|