"நகை எழ எதிர்ந்த
இன்பம் ஐம் பொறிகள் நாடலின் காவலே
ஆற்றாப்
பகை எழ, ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது
ஏது?
என்றாள்.
"பகை எழ முனிந்து, பழுது உற எவையும் பருகு அழல், உமக்கு
வேண்டாதோ?
நகை எழ உதவும் திறத்து அவை பேணி, நவை உறா, காமின் நீர்"
என்றான். |
"ஐம்பொறிகள்
தமக்கு மகிழ்ச்சி உண்டாகுமாறு எதிர்ப்பட்ட
இன்பத்தையே நாடுதலினால், காக்க இயலாத பகையாய் எழவும்,
ஆண்டவனே ஆதி நாள் தொட்டு அவ்வைந்தையும் படைத்து எமக்குத்
தந்த காரணம் ஏது?" என்றாள் அவள். அவன், "பகை போல் எழுந்து
சினந்து, தன்முன் வந்த எவற்றையும் பழுதுற உண்டு தீர்க்கும் நெருப்பு,
உமக்கு வேண்டாதது ஆகுமோ? பாவம் நேரா வண்ணம், மகிழ்ச்சி
உண்டாக உதவும் முறையில் அவற்றை நீங்கள் பேணிக் காத்துக் கொள்ளுங்கள்" என்றான்.
| 145 |
இனையவும்
பலவுங் கூறிய தன்மைத் தெவரும்வே
றாய்மன
வூக்கம்
புனையவு முணர்விற் றெளியவு மோங்கிப் புதிதுயர் பொருப்
பெலாம்
பூத்த
தனையவு மலர்ந்த நெஞ்சறம் வெஃகி யடிதொழு தனைவரு
மழப்போய்
வனையவு மரிய மாட்சியின் மூவர் வாய்ந்தவவ் வரைகடந்
தகன்றார்.
|
| |
இனையவும் பலவும்
கூறிய தன்மைத்து, எவரும் வேறாய் மன ஊக்கம்
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி, புதிது உயர் பொருப்பு
எலாம்
பூத்தது
அனையவும் மலர்ந்த நெஞ்சு அறம் வெஃகி, அடி தொழுது
அனைவரும்
அழ, போய்,
வனையவும் அரிய மாட்சியின் மூவர் வாய்ந்த அவ் வரை கடந்து
அகன்றார்.
|
திரு
மகனும் சூசையும் இவையும் இவை போல் வேறு பலவும் கூறிய
தன்மையால், ஆணும் பெண்ணுமாகி யாவரும் வெவ்வேறு விதமாய்
மனவூக்கம் கொள்ளவும் உணர்வில் தெளியவுமாக எழுச்சி கொண்டு,
உயர்ந்த அம்மலையிடமெல்லாம் அன்று புதுமையாப் பூத்தது போலத்
தாமும் மலர்ந்த
|