உறீஇ
என்பது உற்று என்பதன் சொல்லிசை அளபெடை.
48 |
தகைமலி நாடுறீஇத்
தளிர்த்த வோகையிற்
பகைமலி கோமக னாளும் பான்மையை
முகைமலி முல்லையார் மொழியக் கேட்டலு
மிகைமலி சூசையுள் வெருவி னானரோ. |
|
தகை மலி நாடு
உறீஇத் தளிர்த்த ஒகையில்,
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை
முகை மலி முல்லையார் மொழியக் கேட்டலும்,
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ. |
தகுதி
நிறைந்த தம் நாட்டை அடைந்ததனால் தழைத்த
மகிழ்ச்சியினிடையே, தம் மீது பகை நிறைந்ந ஏரோத மன்னனின் மகன்
அவன் இடத்திலிருந்து ஆளும் தன்மையைப் பூவரும்புகள் நிறைந்த முல்லை
நிலத்தவராகிய இடையர் கூறக் கேட்டதும், துன்பத்தால் நிறைந்த சூசை
உள்ளத்தில் அச்சங்கொண்டான்.
149 |
நிலத்திலா
ளரசரை யாளு நீதியோன்
வலத்திலாள் பவனருள் வழங்கு மென்றுவிண்
டலத்திலாள் விடலைதூ தணுகிச் சாற்றிய
நலத்திலாழ் துயர்வள னயப்ப நீக்கினான். |
|
"நிலத்தில்
ஆள் அரசரை ஆளும் நீதியோன்
வலத்தில், ஆள்பவன் அருள் வழங்கும்" என்று, விண்
தலத்தில் ஆள் விடலை தூது அணுகி, சாற்றிய
நலத்தில், ஆழ் துயர் வளன், நயப்ப, நீக்கினான்.
|
விண்ணுலகில்
ஆளும் வானவன் ஒருவன் இளைஞன் வடிவத்தில்
தூதுவனாக அணுகி, "மண்ணுலகில் ஆளும் அரசரையெல்லாம் ஆளும்
நீதியுள்ள கடவுளின் வல்லமையால், இப்பொழுது இந்நாட்டை ஆள்பவன்
அருளே வழங்குவான்" என்று சொல்லிய நலத்தால் சூசை மகிழ்ந்து, தனது
ஆழ்ந்த துயரத்தை நீக்கினான்.
|