150 |
மாலையாய்
நயந்துயர் மயங்கிச் சேர்ந்துறக்
காலையா யிரவிகாண் கஞ்சம் போலறச்
சாலையா நாசரெத் தென்னுந் தந்நகர்
பாலையாய் மலர்ந்தெழப் பற்றி யண்டினார். |
|
ாலையாய் நயம்
துயர் மயங்கிச் சேர்ந்து உற,
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல், அறச்
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர்
பாலை ஆய், மலர்ந்து எழ, பற்றி அண்டினார்.
|
இவ்வாறு
இன்பமும் துன்பமும் மாலையில் அமைந்த பலவகை
மலர்போல் கலந்து சேர்ந்து தம்மை அடையக் கொண்டு, அறச்சாலை
என்னத்தக்க நாசரெத்து என்னும் தம் நகரம், முன் தம் பிரிவால்
பாலைவனம் போல் ஆகி, இப்பொழுது தம் வருகையால், காலைப்பொழுது
வந்த கதிரவனைக் கண்ட தாமரை மலர்போல் மலர்ந்து எழுச்சி
கொள்ளுமாறு, மூவரும் கைக்கெட்டிய தன்மையாய் அதனை நெருங்கினர்.
நகரத்தார்
வரவேற்பு
-
மா, கருவிளம், - மா, கருவிளம்
151 |
ஆடிப் பலகொடி
யாக வசையவு
நேடிப் பலகர நீட்டி வருகென
வோடிப் பலதுய ரோயக் கடிநகர்
நாடிப் பலவர நல்கக் குறுகினார். |
|
ஆடிப் பல கொடி
ஆக அசையவும்,
நேடிப் பல கரம் நீட்டி, "வருக" என,
ஓடிப் பல துயர் ஓய, கடி நகர்,
நாடிப் பல வரம் நல்க, குறுகினார். |
அம்மூவரையும்
தேடியிருந்து அந்நகரம் தன் பல கைகளை நீட்டி,
"வருக!" என்று அழைத்தாற் போல், அங்குள்ள பல கொடிகளும்
மொத்தமாக அசைந்தாடவும், பல துயரங்களும் ஓடி மறையவும், தாமே நாடி
வந்து பல வரங்களையும் அதற்குக் கொடுக்கவென்று, மூவரும் காவலுள்ள
அந்நகரத்தை அணுகினர்.
|