160 |
நகர்நீத்
தகலவு நாமே மெலீவுறீஇ
நிகர்நீத் தரசிடு நீங்காப் பகையொடு
மகர்நீத் தழவழ வாழ்நீ ரருமகன்
புகர்நீத் துடையினி ரென்றே புகழுவார். |
|
"நகர் நீத்து
அகலவும், நாமே, மெலிவு உறீஇ,
நிகர் நீத்து அரசு இடு நீங்காப் பகையொடு
மகர் நீத்து, அழ அழ, வாழ் நீர், அரு மகன்
புகர் நீத்து உடையினிர்!" என்றே புகழுவார்.
|
"நீங்கள்
இந்நகரை விட்டு நீங்கவும், நாங்களோ, நிகரில்லாமல்
இந்நாட்டு அரசன் கொண்ட நீங்காப் பகையின் காரணமாக எங்கள்
மக்களை இழந்து, அதனால் மெலிந்து, விடாது அழுது கொண்டிருக்க,
நல்வாழ்விற்குரிய நீங்களோ, குற்றம் ஒன்றுமின்றி உங்கள் அருமை
மகனைக் கொண்டுள்ளீர்கள்!" என்று அந்நகரத்தார் புகழ்வர்,
உறீஇ
என்பது உற்று என்பதன் சொல்லிசை அளபெடை.
மீட்சிப்
படலம் முற்றும்.
ஆகப்
படலம் 30 க்குப் பாடல்கள் 3100.
|