பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 565

                     8
விண்ணு ளோரிவண் மிடைந்துற வருத்திசெய் தங்கண்
மண்ணு ளோருற வழியென நின்றவக் கோயில்
புண்ணு ளோர்மருந் தொத்தன புதல்வன்காண் பொழுதிற்
பண்ணு ளோதையிற் பனிமொழி மதுவுகப் பணித்தான்.
 

விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து, அங்கண்
மண் உளோர் உற வழி என நின்ற அக் கோயில்,
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில்,
பண் உள் ஓதையின், பனி மொழி மது உகப் பணித்தான்;


     வானுலகில் உள்ளோர் கூடி இவ்வுலகிற்கு இறங்கி வரத்தக்க
ஆசையை விளைவித்தும், மண்ணுலகில் உள்ளோர் அவ்வானுலகிற்கு ஏறிச்
செல்ல வழிபோல் அமைந்தும் நின்ற அக்கோவிலை, புண்
உள்ளவர்க்கெல்லாம் மருந்து போன்ற திருமகன் கண்டபோது, வீணையின்
உள்ளிருந்து பிறக்கும் ஓசை போன்று, குளிர்ந்த சொற்களைத் தேன்
சொரிந்த தன்மையாய் இவ்வாறு சொல்லத் தொடங்கினான்:

     இதே கருத்து வருமிடம் 2 : 2.

                 ஏணியும் சிலுவையும்

     தேமா, - விளம், - மா, - - காய்

 
                9
மண்மே லடியைவைத் தெந்தை வலக்கையால்
விண்மேல் விருப்பொடு தாங்க விண்ணவர்வந்
தெண்மே லிழிந்தெழுந் துலவ வியாக்கோபன்
கண்மே லறிவிலிங் கேணி கண்டனனால்.
 
"மண்மேல் அடியை வைத்து, எந்தை, வலக் கையால்
விண்மேல் விருப்பொடு தாங்க, விண்ணவர் வந்து
எண்மேல் இழிந்து எழுந்து உலவ, இயாக்கோபன்
கண்மேல் அறிவில் இங்கு ஏணி கண்டனன் ஆல்.

     "என் தந்தையாகிய கடவுள், ஏணியின் அடியைத் தரைமேல் வைத்து,
அதன் முடியைத் தம் வலக்கையால் வானத்தில் விருப்பத்தோடு தாங்கி
நிற்கவும், எண்ணுக்கு அடங்காத வானவர் வந்து அதன்மீது இறங்கியும்