ஏறியும் உலாவிய வண்ணமாக,
யாக்கோபு என்பவன் இவ்விடத்தில் தன்
கண்ணுக்கு மிஞ்சிய தெய்வக் காட்சி அறிவால் ஓர் ஏணியைக் கண்டான்.
'ஆல்'
அசைநிலை. இவ்வேணிக் காட்சி விவரம், ப.ஏ. ஆதியாகமம்,
28 : 10 - 15 தேம்பாவணி 2 : 42 காண்க.
10 |
சீர்மீ தாடிய
காட்சிச் சிறப்புள்ளி
கார்மீ தாடிய கொடிகொள் கவின்சிகரத்
தேர்மீ தாடிய வெரிவாய் மணிகுயிற்றிப்
பார்மீ தாடிய படரிவ் வாலயமே. |
|
"சீர் மீது
ஆடிய காட்சிச் சிறப்பு உள்ளி
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து.
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி,
பார் மீது ஆடிய, படர் இவ் ஆலயமே.
|
"புகழுக்கெல்லாம்
மேம்பட நின்ற அத்தெய்வக் காட்சியின் சிறப்பைக்
கருதி, கருமேகத்தின் மீது அசைந்தாடிய கொடியைக் கொண்டுள்ள அழகிய
கோபுர உச்சியோடு, அழகுக்கெல்லாம் மேம்பட நின்ற ஒளியைக் கொண்ட
மாணிக்கங்களைப் பதித்து' பரத்த இக்கோயில் இம்மண்ணின் மீது
அமைக்கப்பட்டது.
'ஆடியது'
என்ற முடிக்கும் சொல் ஈறு குறைந்து நின்றது
11 |
முன்னா ளிவையிவண்
காண்கான் முற்றுவப்பப்
பின்னா ளுனதினத் துதிக்கும் பிள்ளையருட்
டன்னா லுனக்கொளி தளிர்ப்பக் கண்டதெலா
மன்னான் முடிக்குவ னென்றா னன்றிறையோன். |
|
"முன்னான் இவை
இவண் காண் கால், 'முற்று உவப்ப,
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள்
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப, கண்டது எலாம்
அன்னான் முடிக்குவன்" என்றான் அன்று இறையோன்.
|
"முன்னே
குறித்த யாக்கோபன் இவற்றை இவ்விடத்தில் காட்சியாகக்
கண்டபோது, 'நீ முற்றிலும் மகிழுமாறு, பிற்காலத்தில் உனது இனத்தில்
|