பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 57

           90
கண்பொழி கலுழி போற்றிக்
     களிப்புகுங் காட்சி யுற்றுப்
புண்பொழி யுதிரத் தாவி
     போக்கிய மகவர் யாரும்
விண்பொழி யொளியின் வாழ்ந்து
     வினையறுங் கதியிற் கண்டு
பண்பொழி யுரையி னாதற்
     பணிந்திவர் வாழ்த்திச் சொன்னார்.
 
கண் பொழி கலுழி போற்றிக் களிப்பு உகும் காட்சி உற்று,
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும்
விண் பொழி ஒளியின் வாழ்ந்து வினை அறும் கதியிற் கண்டு,
பண் பொழி உரையின் நாதற் பணிந்து இவர் வாழ்த்திச் சொன்னார்.

      அவ்வாறு வருந்திய இவ்விருவரும் கண்ணினின்று பொழிந்த நீரை
விலக்கிக் களிப்பைச் சொரியும் மற்றொரு காட்சியை அடைந்து,
புண்ணினின்று பொழியும் உதிரத்தோடு உயிரைப் போக்கிய அப் புதல்வர்
யாவரும் விண்ணின்று பொழியும் ஒளியினிடையே சென்று வாழ்ந்து
தீவினை யெல்லாம் அறும் நற்கதி அடையக் கண்டு, இசையைப் பொழிவது
போன்ற உரையால் அக்குழந்தை நாதனை வணங்கிப் பின்வருமாறு
வாழ்த்திக் கூறினர்.

                  குழந்தைநாதன் வாழ்த்து

      - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்

 
                91
''ஆல மேயமு தாக்கிய பான்மையாற்
சீல மேவிலன் செய்பகை தம்முயிர்
கால மேனியி றந்தனர் காந்திசெய்
கோல மேவுருக் கொண்டெழ நல்கினாய்
 
''ஆலமே அமுது ஆக்கிய பான்மையால்
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர்
கால மேனி இறந்தனர் காந்தி செய்
கோலம் மேவு உருக் கொண்டு எழ நல்கினாய்.