18 |
பத்திய மணிவிழப்
படர்ந்த கேவண
மொத்திய னுயிர்மணி மகனொ ளித்தலா
னித்திய நயநல நீங்கி வாடினார்
தத்திய வுயிரில்வெற் றுடம்பின் றன்மையார். |
|
பத்திய மணிவிழப்
படர்ந்த கேவணம்
ஒத்து, இயல் உயிர் மணிமகன் ஒளித்தலால்,
நித்திய நயநலம் நீங்கி வாடினார்,
தத்திய உயிர்இல் வெற்று உடம்பின் தன்மையார். |
வரிசையாய்ப்
பதித்த மாணிக்கங்கள் விழுந்து போக வெறுமையாய்ப்
பரந்த குழிகளைப் போன்று, தம் உயிருக்கு மணியாய் நின்ற மகன்
மறைதலால், என்றும் உள்ள தம் அழகு நலம் நீங்கி இருவரும் வாடினர்.
தத்தளித்துக் கொண்டிருந்த உயிர் இல்லாத போன வெறும் உடம்புகளின்
இயல்பை அடைந்தனர்.
19 |
குன்றொளித்
தகல்கதி ரொத்த கொள்கையா
னன்றொளித் தவன்றனைத் தேடற் காங்குவேண்
டென்றொளித் தனவுயி ரியாக்கை மீண்டுறீஇக்
கன்றொளித் துளிகரை கறவை மானினார். |
|
குன்று ஒளித்து
அகல் கதிர் ஒத்த கொள்கையான்,
அன்று ஒளித்தவன் தனைத் தேடற்கு ஆங்கு வேண்டு
என்று, ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ,
கன்று ஒளித்து உளி கரை கறவை மானினார். |
மலையில்
மறைந்து நீங்கும் கதிரவனைப்போல அன்று தம்மை
விட்டு மறைந்த திருமகனைத் தேடுவதற்கு அங்குத் தமக்கு உயிர்
வேண்டுமென்ற காரணத்தால், முன் தம்மை விட்டு மறைந்த தம் உயிர்
மீண்டும் தம் உடல்களோடு பொருந்தவே, கன்று மறைந்த விடத்துக் கதறும்
பசுவை ஒத்தனர்.
20 |
செல்லகத்
தனைத்திலுஞ் சென்று தேடினார்
தொல்லகத் துறவினோர்த் தொடர்ந்து நாடினார்
வல்லகத் துலகையாள் மகனைக் காண்கிலார்
கல்லகத் தாருமுட் கலங்க விம்மினார். |
|