பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 572

     "எல்லையில்லாது, எவ்விடத்தும் நிறைந்திருந்து, அவற்றுள்ளும்
அடங்குதல் இல்லாதவனே! விரைந்து தொடர்ந்து வரும் கால வரப்பு
ஒன்றும் இல்லாதவனே!, முற்காலம் தொட்டே எல்லாம்
அறிந்துள்ளவனே! நிறைந்த எம் துயரத்தை விரைவிலே நீக்காமல்,
எங்களை மறந்து விட்டாயோ?" என்பர்.

 
               23
இனையவும் பலவுமோர்ந் திரிந்து றுந்துயர்
சினையவும் பொறாதொளி திரையி றாழ்ந்திருள்
புனையவு மிராவெலா மிசலிப் பொங்கலை
யனையவும் படவள ரஞரில் விம்மினார்.
 

இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர்
சினையவும் பொறாது, ஒளி திரையில் தாழ்ந்து இருள்
புனையவும், இரா எலாம் இசலி, பொங்கு அலை
அளையவும் பட வளர் அஞரில் விம்மினார்.


     இத்தகையனவும் பிற பலவும் எண்ணி அலைந்து அவ்விருவரும்
அடையும் துயரத்தைச் சிறிதும் பொறுக்க மாட்டாதவன் போல், ஒளி
மன்னனாகிய கதிரவன் கடலினுள் மூழ்கி இருளென்னும் போர்வையால்
தன்னை மூடிக்கொள்ளவும், அவ்விருவரும் அவ்விரவெல்லாம் வுருந்தி,
பொங்கி எழும் அலைகள் யாவும் ஈடாகாதபடி வளரும் துன்பத்தால்
ஏங்கிய வண்ணமே இருந்தனர்.

                      இருவர் புலம்பல்

     - மா, - மா, - மா, - மா, - மா, - மா

 
                 24
கருணா கரனே களியா லயனே கவினார் மகனே
மருணா னஞர்மா கடலில் வருந்தக் கரையற் றிடநீ
யருணா டியகன் றுறைகின் றகமே யருளாய் கொல்லோ
தெருணா யகனே யென்றா டிறம்பா வருவிக் கண்ணாள்.
 
"கருணாகரனே, களி ஆலயனே, கவின் ஆர் மகனே,
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த, கரையற்றிட நீ
அருள் நாடி, அகன்று உறைகின்ற அகமே அருளாய் கொல்லோ?
தெருள் நாயகனே!" என்றாள், திறம்பா அருவிக் கண்ணாள்.