மாறாத
அருவி போல் கண்ணீர் பொழியும் கண்ணை உடைய
மரியாள், "கருணைக்கு இருப்பிடமானவனே, இன்பம் தங்கியிருக்கும்
கோயிலானவனே, அழகு நிறைந்த மகனே, தெளிவுக்கெல்லாம் தலைவனே!
மயங்கும் நான் துன்பப் பெருங்கடலில் விழுந்து வருந்திக் கொண்டிருக்க,
அதினின்று என்னைக் கரையேற்றும் பொருட்டு, அருள் கருதி, நீ எம்மை
விட்டு அகன்று தங்கியிருக்கின்ற இடத்தைத் தெரிவித்தருள மாட்டாயோ?"
என்று புலம்பினாள்.
'கருணாகரன்'
என்பதனைக் 'கருணை + ஆகரன்' எனவும்,
'உறைகின்றிடம்' என்பதனை 'உறைகின்ற இடம்' எனவும் பிரித்துப் பொருள்
காண்க.
25 |
இறந்தான்
கொல்லோ முதலீ றில்லோன் றனதார் தயையை
மறந்தான் கொல்லோ மறவா வன்போன் கடல்சூழ் வையந்
துறந்தான் கொல்லோ வுன்னை யென்னைத் துறந்தோ னிதுவே
யறந்தான் கொல்லோ மகனே யறைகென் றழுதான் வளனே. |
|
"இறந்தான் கொல்லோ,
முதல் ஈறு இல்லோன்? தனது ஆர் தயையை
மறந்தான் கொல்லோ, மறவா அன்போன்? கடல் சூழ் வையம்
துறந்தான் கொல்லோ, உன்னை என்னைத் துறந்தோன்? இதுவே
அறம் தான் கொல்லோ? மகனே! அறைக" என்று அழுதான் வளனே. |
சூசையோ,
"தனக்கு முதலும் முடிவும் இல்லாத அவன் ஒருவேளை
இறந்து போனானோ? மறவாத அன்பு கொண்ட அவன், தனது நிறைந்த
இரக்கத்தையே மறந்து விட்டானோ? உன்னையும் என்னையும் துறந்த
அவன், கடல் சூழ்த்த இவ்வுலகத்தையே துறந்து விட்டானோ? மகனே!
இச்செயல் அறமாய் அமையக்கூடியதோ? நீயே சொல்வாய்" என்று
அழுதான்.
'கொல்'
ஐயப் பொருள் கருதிய இடைச்சொல்.
|