|
மடிந்தாலன்றி, வாழ்நாள்
முடியு மட்டும் நான் வருந்திக் கொண்டே
இருப்பேன்' என்று கூறினான் அல்லவா?" என்று நினைவூட்டினாள் மரியாள்.
வானவர்
சிலுவை காட்டிய நிகழ்ச்சி 30:118 - 122 காண்க.
| 28 |
வையத் தடிவைத்
துயர்வான் மன்னன் கையிற் சாயப் பொய்யற் றவருந் தவன்முன் பொலியக் கண்ட
வேணி
யுய்யத் தரணி நானே யுலக்குஞ் சிலுவைக் கொப்பாய்
மெய்யற் றிவணே விளிவே னென்றா னன்றோ வென்றான். |
| |
"'வையத்து அடி
வைத்து, உயர் வான் மன்னன் கையில் சாய,
பொய் அற்ற அருந் தவன், முன், பொலியக் கண்ட ஏணி,
உய்யத் தரணி, நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய்,
மெய் அற்று இவணே விளிவேன்' என்றான் அன்றோ?" என்றான். |
"அத்திருமகன்,
'பூமியில் தன் அடியை வைத்தும், தன் உச்சி வானுலக
மன்னனாகிய ஆண்டவன் கையில் சாயவும், முற்காலத்தில், பொய்சாராத
அரிய தவத் தோனாகிய யாக்கோபு பொலிவுடன் கண்ட ஏணி, இவ்வுலகம்
உய்யும் பொருட்டு, நானே இறக்கப் போகும் சிலுவைக்கு ஒப்பாகுமாறு, என்
உடலில் உயிர் நீங்க இவ்விடத்தே நான் மடிவேன்' என்றும் சொன்னான்
அன்றோ?" என்று சூசை சொன்னான்.
இந்நிகழ்ச்சி,
இப்படலம் 8 - 12 காண்க.
| 29 |
பற்றார்
பழையம் பழியைப் பரிவான் படுவா யென்னாக்
கற்றா ரணங்காட் டியகாட் சியறிந் தன்றோ வுன்னைப்
பெற்றா யினதே பிரியா வன்போய் பெயரா முன்வந்
துற்றா சியெனக் குரைத்தா லாகா தேயோ வென்றாள். |
| |
"பற்றார் பழையம்
பழியைப் பரிவான் படுவாய் என்னா,
கற்று ஆரணம் காட்டிய காட்சி அறிந்து அன்றோ, உன்னைப்
பெற்று ஆயினதே? பிரியா அன்போய், பெயரா முன் வந்து
உற்று, ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ?" என்றாள். |
|