"'மடவாரில்
அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை' என,
தட வானில் உயர்ந்த தளங்கள், தணிந்து மொழிந்தனிரே:
நடவா முறையால் நடலை நரலை நடுவே, அடியாள்,
கடவாமல் அலைந்து கலங்குப கண்டிலிரோ?" என்றாள். |
"பெருமை
கொண்ட வானத்தில் வாழும் உயர்ந்த வானவர்
படையணிகளே, 'மாதருக்குள் அளவில்லாத வரங்கள் நிறைந்து மகிழ்ந்த
மங்கை' என்று என்னை முன் வணங்கிக் கூறினீர்களே! இப்பொழுது,
ஆண்டவனின் அடியாளாகிய நான், நடப்பில் இல்லாத விதமாக,
துன்பமென்னும் கடல் நடுவே கடக்க இயலாமல் அலைந்து கலங்குவதை
நீங்கள் காணவில்லையோ?" என்றாள் மரியாள்.
| 32 |
அஞ்சே ரஞ்சீ
ரடையித் தலமண்டியகா லடியேற்
கஞ்சே லஞ்சே னயமா மெனவா டினவா னவனே
யஞ்சே ழஞ்சேழ் கடலா னொவ்வா தவஞர்க் கடலாழ்ந்
தஞ்சே ரெஞ்சா நயனிங் கணகன் றதுவே யென்றான். |
| |
"அம் சேர் அம்
சீர் அடை இத்தலம் அண்டியகால், அடியேற்கு
'அஞ்சேல், அஞ்சேல்; நயம் ஆம்' என ஆடின வானவனே,
அஞ்சு ஏழ் அஞ்சு ஏழ் கடலான் ஒவ்வாத அஞர்க் கடல் ஆழ்ந்து,
அம்சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே!" என்றான். |
"நீரின்
சேர்க்கையால் அழகும் செல்வமும் அடைந்துள்ள
இவ்விடத்தை நான் அடைந்தபோது, 'அஞ்சாதே, அஞ்சாதே; இதனால்
இன்பமே விளையும், என்று அடியேனுக்குச் சொன்ன வானவனே, ஐயேழும்
ஐயேழுமாக எழுபது கடலாலும் ஒப்பாகாத துன்பக் கடலில் நான்
முழுகும்படி, எனக்கு அழகுடன் சேர்ந்த குறையாத இன்பப் பொருள் இங்கே
என்னை விட்டு நீங்கியதே!" என்றான் சூசை.
| 33 |
என்றா னிவனு
மென்றா ளவளு மென்றா ளென்றாங்
கொன்றா வுரைகொண் டுபுலம் பினருட் டுயர்கண் டதனாற்
குன்றா நயவா னவருங் குழைந்தா குலித்தா லெனநின்
றன்றா ரிடரா றவிவற் குமவட் குமறைந் தனரால். |
|