என்றான் இவனும்;
மென்தாள் அவளும் என்றாள்; என்று, ஆங்கு
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால்,
குன்றா நய வானவரும் குழைந்து, ஆகுலித்தால் என நின்று
அன்று ஆர் இடர் ஆற, இவற்கும் அவட்கும் அறைந்தனர் ஆல்: |
என்று
இவ்வாறெல்லாம் இவனும் சொன்னான்; மெல்லிய அடி
கொண்ட அவளும் கொன்னாள்; என்று இவ்வாறெல்லாம், அங்கு
மெய்க்கொவ்வாது உரைகளால் புலம்பிய அவ்விருவர் தம் மனத் துயரைக்
கண்டதனால், குறையாத இன்பங்கொண்ட வானவரும் குழைந்து, தாமும்
வருந்தினாற்போல நின்று, அன்று அவர்கள் கொண்ட நிறைதுன்பம்
ஆறுமாறு, இவனுக்கும் அவளுக்கும் பின்வருமாறு கூறினர்:
'ஆல்'
அசைநிலை. 'உண்மையோடு பொருந்தாத உரை' என்றது,
உயிரோடிருக்கும் திருமகனை இறந்தவனாகவே கருதிக் கூறிய உரை.
| 34 |
துயரே னஞரே
னுளமாழ்ந் துறுதொன் னயமாக் கடலிற்
பெயரேல் பெயரேல் பெயராப் பெருமைத் தனயன் பிரிவால்
மயரேன் மயரேன் வளனே மரியே மருணெஞ் சுருகா தயரே
லயரேல் மகன்மாண் டிலன்மாண் டிலனென் றறைந்தார். |
| |
"துயர் ஏன்?
அஞர் ஏன்? உளம் ஆழ்ந்து உறுதொல் நயமாக் கடலின்
பெயரேல், பெயரேல், பெயராப் பெருமைத் தனயன் பிரிவால்
மயர் ஏன், மயர் ஏன்? வளனே, மரியே, மருள் நெஞ்சு உருகாது
அயரேல், அயரேல். மகன் மாண்டிலன், மாண்டிலன்" என்று அறைந்தார். |
"சூசையே,
மரியே, துயரம் ஏன்? துன்பம் ஏன்? உள்ளத்தில் ஆழ்ந்து
கிடக்கும் பழைய இன்பமென்னும் பெரிய கடலினின்று பெயராதீர்,
பெயராதீர். நீங்காத பெருமை கொண்ட மகன் பிரிவால் மயக்கம் என்,
மயக்கம் ஏன்?
|