|
மயக்கம் கொண்ட
நெஞ்சம் உருகி, சோராதீர், சோராதீர்; மகன்
இறந்தானல்லன், இறந்தானல்லன்" என்று கூறினர்.
'பெயரேல்,
அயரேல்', என்ற எதிர்மறை ஏவல் ஒருமை
வினைமுற்றுக்கள், 'பெயராதீர், அயராதீர்' என்ற பன்மைப் பொருள் தந்து
நின்றன.
| 35 |
ஐயன் போக
வவரெய் தியவா குலமச் சொல்லா
லையம் போகத் தணிவா மெனினு மன்றாங் கிரவி
மையல் போக வரினு மனமே விளக்குஞ் சுடரா
மெய்யன் போக வொளிபோய் விழிபோ யிற்றென் றழுதார். |
| |
ஐயன் போக அவர்
எய்திய ஆகுலம், அச் சொல்லால்
ஐயம் போக, தணிவு ஆம் எனினும், அன்று ஆங்கு இரவி
மையல் போக வரினும், "மனமே விளக்கும் சுடர் ஆம்
மெய்யன் போக, ஒளி போய், விழி போயிற்று!" என்று அழுதார். |
தலைவனாகிய
திருமகன் பிரிந்து போகவே அவர்கள் அடைந்த
துயரம், அவன் இறந்தானோ என்ற ஐயம் அச்சொல்லால் நீங்கவே, ஓரளவு
தணிந்ததெனினும் அன்று அங்கு இருள் நீங்குமாறு ஞாயிறு உதித்து
வந்ததெனினும், "மனத்தை ஒளிரச் செய்யும் சுடராகிய மெய்ப் பொருள்
என்றும் அவன் பிரிந்து போகவுமே, ஒளி போய், அதனால் கண்ணும்
போனது போல் ஆயிற்று!" என்று இருவரும் அழுதனர்.
சூசை
தேடி அழுதல்
-
மா, - மா, - - காய், - - காய்.
| 36 |
செம்மா மணியிற்
செல்வனைத்தாய் தேடியக
லம்மா நகர்க்கண் ணழுதன்றே யலையுங்காற்
பைம்மா மலர்பெய் காவழியிற் பரிவோங்கத்
தம்மா மகனைத் துருவுகின்றான் றவவல்லான். |
|