செம் மா மணியின்
செல்வனைத் தாய் தேடி, அகல்
அம் மா நகர்க்கண், அழுது அன்றே அலையும் கால்,
பை மா மலர் பெய் கா வழியில், பரிவு ஓங்க,
தம் மா மகனைக் துருவுகின்றான், தவ வல்லான். |
தாயாகிய
மரியாள், பரந்த அந்தப் பெரிய எருசலேம் நகரில்,
செந்நிறமுள்ள சிறந்த மாணிக்கம் போன்ற மகனைத் தேடி, அன்று அழுது
அலைந்து கொண்டிருந்த வேளையில், தவத்தில் வல்லவனாகிய சூசை,
அன்பு மேலோங்க, பசுமையான சிறந்த மலர்களைப் பொழியும் காட்டு
வழியில், தன் சிறந்த மகனைத் தேடிக்கொண்டிருக்கின்றான்.
| 37 |
புள்ளும் புலம்ப
வண்டுமழப் பூவுநைய
விள்ளுங் காவும் வினைகொண்டுண் மெலிந்திரங்கக்
கொள்ளுந் துயரிற் கண்டதெலாங் கொழுந்தவன்றா
னுள்ளுந் தன்மைத் துருகியழ வினாவினனே. |
| |
புள்ளும் புலம்ப,
வண்டும் அழ, பூவும் நைய
விள்ளுங் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க,
கொள்ளும் துயரில், கண்டது எலாம், கொழுந் தவன், தான்
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே: |
பறவைகளும்
புலம்ப, வண்டுகளும் அழ, மலர்களும் நைந்து வாட,
மலர் விரியும் சோலையும் மகனைத் தேடும் வினையை உள்ளத்தில்
கொண்டு நெஞ்சம் சோர்ந்து வருந்த, வளமான தவங் கொண்ட சூசை,
கொண்ட துயரத்தால், தான் நினைக்கும் தன்மை போல் பிறவும் உருகி
அழுமாறு, கண்டதெல்லாம் வினவினான்:
கண்டன
எல்லாம் என வரவேண்டியது கண்டது எல்லாம் என
வந்தது ஒருமைப் பன்மை மயக்கம்.
| 38 |
என்றன் சிந்தை
போனிலையா திரிசிந்தே
நின்றன் சிந்தை போற்கடனா னேடியலைந்
தின்றென் சிந்தை யெஞ்சவிவ ணருட்கடலோ
னுன்றன் சிந்தை யெழவுற்றா னோவென்றான். |
|