"என் தன் சிந்தை
போல் நிலையாது இரி சிந்தே,
நின் தன் சிந்தை போல், கடல் நான் நேடி அலைந்து,
இன்று என் சிந்தை எஞ்ச, இவண், அருள் கடலோன்,
உன் தன் சிந்தை எழ, உற்றானோ?" என்றான். |
"எனது
சிந்தனையைப் போல் நிலையில்லாது அலைந்து திரியும்
ஆறே, உனது சிந்தனையைப் போலவே, நானும் ஒரு கடலைத் தேடி
அலைந்து கொண்டிருக்க, கருணைக் கடலாகிய என் மகன், இன்று என்
மனம் மெலியவும், உன் மனம் எழுச்சி பெறவுமாக, இங்கு வந்து
சேர்ந்தானோ?" என்றான்.
| 39 |
கண்ணோ மணியோ
கமழ்மதுப்பெய் மலர்க்காவே
பண்ணோ தேனோ பணிந்திணையாக் கனிசொல்லா
னுண்ணோ யருந்தென் னுளம்வாட வருட்பூத்து
விண்ணோர் மலர்போல் வேய்ந்தனனோ விவணென்றான். |
| |
|
"கண்ணோ மணியோ
கமழ் மதுப் பெய் மலர்க் காவே,
பண்ணோ தேனோ பணிந்து இணையாக் கனி சொல்லான்,
உள் நோய் அருந்து என் உளம் வாட, அருள் பூத்து,
விண் ஓர் மலர் போல், வேய்ந்தனனோ இவண்?" என்றான்.
|
"கண்
போலவோ மாணிக்கம் போலவோ என வியப்புறும்படி மணம்
கமழும் தேனைப் பொழியும் மலர்களைக் கொண்டுள்ள சோலையே,
வீணையும் தேனும் பணிந்து ஒப்பாதல் இல்லாத கனிந்த சொல்லைக்
கொண்ட திருமகன், உள்ளே துன்பம் நுகரும் என் உள்ளம் வாடுமாறு,
விண்ணுலகிலுள்ள ஒரு மலர் போல அருள் பூத்து இங்கு வந்து
தோன்றினானோ?" என்றான்.
| 40 |
என்னெஞ்
சொப்ப விருபொழுது மிருள்பொழிலே
யுன்னெஞ் சொப்ப வுயிரெல்லா நிழற்றியருள்
தன்னெஞ் சொப்பத் தந்தோம்புந் தயைப்பெருமா
னின்னெஞ் சொப்ப நிறுத்தினையேற் காட்டென்றான். |
| |
"என் நெஞ்சு
ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே,
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி, அருள்
தன் நெஞ்சு ஒப்பத் தந்து ஓம்பும் தயைப் பெருமான்
நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல், காட்டு" என்றான். |
|