|
மரியன்னை
தேடி அழுதல்
-
மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்
| 47 |
படமேயெழு
திப்படர் பங்கயநீண்
டடமேயணு கித்தட மேவியபூ
வடமேயிணை யாமக வுள்ளினளவ்
விடமேமது வின்னிசை தாயறைவாள். |
| |
படமே எழுதிப்
படர் பங்கய நீண்
தடமே அணுகி, தடம் மேவிய பூ
வடமே இணையா மகவு உள்ளினள், அவ்
இடமே, மது இன் இசை தாய் அறைவாள்: |
சித்திரப் படமாய்
எழுதியது போன்று பரந்து கிடந்த நீண்ட தாமரைத்
தடாகத்தை அணுகி, அத்தடாகத்திற் பொருந்திய பூக்களால் அமைத்த
மாலையும் ஒப்பாகாத மகனை நினைந்தவளாய், அவ்விடத்து நின்றே, தேன்
போன்ற பாடலால் அத்தாய் இவ்வாறு கூறுவாள்:
| 48 |
தேன்றோய்மலர்
தீட்டிய சேடுலவிக்
கான்றோய்தட மேகளி கூர்ந்துனைநேர்
வான்றோயெழில் தோய்மது மாறிலபூத்
தான்றோயென துட்டட மோங்கினதே. |
| |
"தேன் தோய்
மலர் தீட்டிய சேடு உலவிக்
கான் தோய் தடமே, களி கூர்ந்து உனை நேர்,
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே. |
"தேன்
கொண்ட மலர்களைச் சித்திரமாய்த் தீட்டியது போன்ற
அழகோடு பொருந்தி மணம் தோய்ந்த தடாகமே, உன்னைப் போலக் களி
கூர்ந்து, வானத்திற் பொருந்திய அழகு தோய்ந்ததும் தேன் என்றும்
மாறாததுமான ஒரு மலர் தோயப் பெற்ற எனது மனமாகிய தடாகம் முன்னெல்லாம் எழுச்சி கொண்டு
விளங்கியது.
|