| 49 |
பூமாறின தோபொரு
வாப்பகையோர்
தாமாறில தாதெழில் கொய்தனரோ
தேமாறில பூவில தேம்பியுளம்
வேமாறில வெப்பொடு காய்ந்ததுவே. |
| |
|
"பூ மாறினதோ?
பொருவாப் பகையோர்
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ?
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம்,
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே!
|
"அந்த
மலர்தான் என்னை விட்டு மறைந்து போயிற்றோ? ஒப்பற்ற
பகைவர்தாம் மாறாத அழகுள்ள அம்மலரைப் பறித்துச் சென்றனரோ?
இனிமை மாறாத அம் மலர் இல்லாமையால் என் உள்ளம் தேம்பி, வெந்து
போகவும் வழி இல்லாத வெப்பத்தோடு காய்ந்து போயிற்று!
| 50 |
துளிமாரியி
ழந்துளி காய்சுனையோ
நளிவாசமி ழந்தழி நைநனையோ
களிநானுளி ழந்தய ரக்கடிதிவ்
வுளிநீயுமி ழந்துறை வாய்மகனோ. |
| |
"துளி மாரி இழந்த
உளி காய் சுனையோ,
நளி வாசம் இழந்து அழி நை நனையோ,
களி நான் உள் இழந்து அயர, கடிது இவ்
உளி, நீயும், இழந்து உறைவாய் மகனோ? |
"மழைத்
துளியும் இழந்த காலத்துக் காய்ந்த கிடக்கும் குளம்
போலவோ, செறிந்த மணம் இழந்து அழியும் வாடிய மலரைப் போலவோ,
நான் உள்ளத்தில் களிப்பெல்லாம் இழந்து தளரும்படி, என் மகனாகிய நீயே,
விரைந்து இவ்விடத்தை இழந்த தன்மையாய்ப் பிரிந்து, வேறு இடத்துத்
தங்கிக் கொள்வாயோ?
'உறைவாய்
மகனோ' என்ற தொடரின் ஓகாரத்தைப் பிரித்து,
'உறைவாயோ மகன்' எனக் கூட்டுக.
|