| 51 |
அன்னச்சிறை
நீயமலர் தாமரைநா
னென்னச்செறி யின்பொடி ருந்தனமே
முன்னச்சிய தேன்முரு கில்லதெனா
மன்னச்சவி யோய்வன மேகினையோ. |
| |
அன்னச் சிறை
நீ, அலர் தாமரை நான்
என்ன, செறி இன்பொடு இருந்தனமே;
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா,
மன்ன, சவியோய், வனம் ஏகினையோ? |
"அழகு
வாய்ந்தவனே, சிறகுள்ள அன்னம் நீ, மலர்ந்த தாமரை நான்
என்று சொல்லத் தக்கவாறு, செறிந்த இன்பத்தோடு நாம் இருந்தோமே;
முன்னெல்லாம் விரும்பிய தேன் மணம் இல்லாத தென்று கருதி, வனத்திலே
நிலைபெற வென்று இப்பொழுது சென்றாயோ?
'அன்னச்
சிறை' என்பதனை, சிறை அன்னம்' என்று கொள்க.
| 52 |
இன்பீரம
ருந்தியி ருந்தனையே
யன்பீரம கன்றொட கன்றனையோ
முன்பீரமு லாமுள ரித்துணரே
பின்பீரமி லாதது பேர்குவதோ. |
| |
"இன்பு ஈரம்
அருந்தி இருந்தனையே;
அன்பு ஈரம் அகன்றொடு அகன் றனையோ?
முன்பு ஈரம் உலாம் முளரித் துணரே
பின்பு ஈரம் இலாது, அது பேர்குவதோ? |
"என்
அன்பை அருந்தி இன்பமாக என்னோடு இருந்தாயே; அந்த
அன்பின் ஈரம் அகன்றதென்று கருதி என்னை விட்டு அகன்றாயோ? முன்பு
ஈரத்தில் நிலைகொள்ளும் தாமரை மலர்க்கொத்தே, பின்பு ஈரம்
இல்லாதபோது, அவ்விடத்தை விட்டு நீங்கிப்போமோ?
|