பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 59

              94
அஞ்சி னாலென வீங்குவந் தண்மினா
யெஞ்சி னாரிவர்க் கீங்கரு ளீந்துளாய்த்
துஞ்சி னாரென வாங்கவர் தோன்றிவாழ்
நெஞ்சி னாருயிர் நீடுற நல்கினாய்.
 
''அஞ்சினால் என ஈங்கு வந்து அண்மினாய்;
எஞ்சினார் இவர்க்கு ஈங்கு அருள் ஈந்துளாய்;
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி, வாழ்
நெஞ்சின் ஆருயிர் நீடு உற நல்கினாய்.

      ''எரோத மன்னனுக்கு அஞ்சினாற்போல இங்கு வந்தடுத்தாய்; வந்த
இவ்விடத்து மெலிந்து நின்ற இவர்கட்கு உன் அருளை ஈந்தாய்;
அந்நாட்டிலிருந்த அக்குழந்தைகள் இறந்தார்போல அங்கே வெளிக்குத்
தோன்றினும், உள்ளத்தைச் சார்ந்த அருமையான உயிர் என்றும் நீடித்த
பெருவாழ்வு பெற அருளினாய்.

 
                95
வளிவிள் ளாமுகை கொய்தென மாய்ந்துதேன்
றுளிவிள் ளாமுகைத் தேந்தொடை யாகநீ
யளிவிள் ளாதணிந் தம்மகர் யாவருங்
களிவிள் ளாவுயர் செல்கதி வாழ்வரே.
 
''வளி விள்ளா முகை கொய்தென மாய்ந்து தேன்
துளி விள்ளா முகைத் தேம் தொடையாக நீ
அளி விள்ளாது அணிந்து, அம் மகர் யாவரும்
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே.

      ''விரியாத மொட்டு காற்றினால் கொய்தெறியப்பட்டதுபோல
அச்சிறுவர்கள் மாய்ந்தனர். தேன் துளி பிரியாத மொட்டுகளால் ஆகிய
இனிய மாலையாகக் கருணைவிடாது நீயே அவர்களை அணிந்து
கொண்டாய். அதனால் அவர்கள் யாவரும் இன்பம் என்றும் நீங்காமல்
தாம் சென்று சேர வேண்டிய உயர்கதியில் வாழ்ந்துகொண்டிருப்பர்.

 
               96
எண்ணின் மேலெழுஞ் சூட்சி யியற்றிநீ
விண்ணின் மேலெழும் வீடிட வந்துனை
மண்ணின் மேலெழு மாக்கள் பகைப்பரோ
புண்ணின் மேலெழுந் தீப்பொறி யீட்டியே.