| 57 |
கதிராயம
ணிக்கல மேந்தியபா
லெதிராயவ ருட்கிள ரென்மகனே
பொதிராயவி ருட்கதிர் போக்கெனவந்
ததிராயவ கத்துய ராற்றிலையோ. |
| |
"கதிர் ஆய மணிக்
கலம் ஏந்திய பால்
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே,
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து,
அதிர் ஆய அகத் துயர் ஆற்று இலையோ? |
"கதிர்
கொண்ட மாணிக்கப் பாத்திரத்துத் தாங்கிய பாலுக்கு நிகரான
அருள் நிறைந்த என் மகனே, நிறைந்து கிடந்த இருளைப் போக்கும் ஞாயிறு
போல இவ்வுலகில் வந்து தோன்றி, அதிர்ச்சி அடைந்த என் மனத்தின்
துயரை நீ ஆற்றுதல் இல்லையோ?
'இருள்
கதிர் போக்கு' என்பதனை, 'இருள் போக்கு கதிர்' என
மாற்றிக் கூட்டுக. ஆற்றுகின்றிலை என்பது இடைக்குறையாக ஆற்றிலை
என வந்தது.
| 58 |
கயலாம் விழி
யேகட லாமவனை
யயலாடலி லாகிய கன்றனனே
யியலாதவி டுக்கணி யைந்தினிநா
னுயலாம் வழி யொன்றுள தேலுரையீர். |
| |
"கயல் ஆம் விழியே,
கடல் ஆம் அவனை
அயல் ஆடல் இல் ஆகி, அகன்றனனே;
இயலாத இடுக்கண் இயைந்து, இனி நான்
உயல் ஆம் வழி ஒன்று உளதேல், உரையீர். |
"கயல்
மீன்களாகிய என் கண்களே, கடலாகிய அவன் பக்கத்தே
நீங்கள் உலாவுதல் இல்லாமையால், உங்களை விட்டு அகன்று போய்
விட்டானே; தாங்க இயலாத துன்பம் பொருந்தி, அதினின்று இனி நான்
பிழைப்பதற்கு வழி ஒன்று இருக்குமாயின், எனக்குச் சொல்லுங்கள்.
|