| 59 |
மஞ்சேமரு
ளாமது வேகுறையா
விஞ்சேடவிழ் வீயனை விள்முகனை
நெஞ்சேநனி பேணில நீங்கினனே
நஞ்சேயினி யுண்டுண நைந்தழல்வாய். |
| |
"மஞ்சே மருளா
மதுவே குறையா
விஞ்சு ஏடு அவிழ் வீ அனை விள் முகனை,
நெஞ்சே, நனி பேண் இல, நீங்கினனே;
நஞ்சே இனி உண்டு, உண நைந்து, அழல்வாய்." |
"என்
நெஞ்சே, அழகு மாறாமலும் தேன் குறையாமலும் பெருகிய
இதழ்களை விரிக்கும் மலர் போல் மலர்ந்த முகங் கொண்ட அவனை, நீ
நன்கு பேணாத காரணத்தால், அவன் நீங்கிச் சென்று விட்டானே; இனி
நஞ்சையே உணவாக உண்டு, அமுதம் உண்ணும் ஆசையால் நைந்து, நீ
வெதும்புவாய்."
| 60 |
என்றத்தட
மோங்கவி னைந்தழுவாள்
குன்றத்தரு வித்திரள் குன்றுகணாள்
பொன்றத்தக நொந்துபொ றாமலுமீண்
டன்றத்தெரு யாவிலு மாய்ந்தனளே. |
| |
என்று, அத்தடம்
ஓங்க இனைந்து அழுவாள்,
குன்றத்து அருவித் திரள் குன்று கணாள்,
பொன்றத் தக நொந்து, பொறாமலும், மீண்டு
அன்று அத் தெரு யாவிலும் ஆய்ந்தனளே. |
என்று
இவ்வாறெல்லாம், மலையின் அருவித் திரளும் நீர்ப் பெருக்கில்
தனக்குக் குறைபடும் கண்ணை உடைய மரியாள், அந்தத் தடாகம் தன்
கண்ணீரால் பெருகுமாறு, நொந்து அழுவாள். சாதற்குத் தக்க விதமாய்
அவ்விடத்து நின்று நொந்து, மேலும் மனம் பொறாமல், அன்று முன் தேடிய
அந்தத் தெருக்கள் யாவற்றிலும் மீண்டும் தேடலானாள்.
|