| 63 |
தனைய ரீன்றன
ணானெனத் தாய்படு
மனைய யாவும றிந்தகத் தேங்குவே
னனைய லர்ந்தென வீன்றநின் னந்தன
னெனைய னோவெனச் சாற்றுதி நீயென்றாள். |
| |
"தனையர் ஈன்றனள்
நான் என, தாய் படும்
அனைய யாவும் அறிந்து உளத்து ஏங்குவேன்;
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன்
எனையனோ எனச் சாற்றுதி நீ" என்றாள். |
அம்
மங்கை, "நானும் மக்களைப் பெற்றவள் எனவே, ஒரு தாய் படும்
அத்தகைய துன்பம் யாவும் அறிந்து மனம் ஏங்குவேன்; பூவரும்பு மலர்ந்தது
போலப் பெற்ற உன் மகன் எத்தகையவனோ என்று நீ எனக்குச் சொல்லுவாய்" என்றாள்.
'தனயர்'
என்ற சொல், எதுகைப் பொருட்டு, 'தனையர்' என நின்றது.
| 64 |
அரிய தோர்வினை
கேட்டியந் தோவெனாப்
பெரிய தோருயிர்ப் பிட்டனள் பின்றனக்
குரிய தோர்நசை யூங்குளந் தூண்டலாற்
சரிய தோர்மதுப் போலுரை சாற்றினாள். |
| |
"அரியது ஓர்
வினை கேட்டி, அந்தோ!" எனா,
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள்; பின் தனக்கு
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால்,
சரி அது ஓர் மதுப் போல் உரை சாற்றினாள்: |
"ஐயோ!
அரியதொரு காரியத்தை நீ கேட்டாய்" என்று மரியாள்
முதற்கண் ஒரு பெருமூச்சு விட்டாள்; பின் தனக்கு உரிய ஓர் ஆசை
மேலோங்கி உள்ளத்தைத் தூண்டுதலால், சாய்ந்தொழுகிய தேன் போல்
அவளுக்கு ஒன்று சொல்லலுற்றாள்:
'சரிவது'
எனற்பாலது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'சரியது'
ஆயிற்று.
|