| 65 |
பாவி தந்தம
கற்குரி பான்மைகேள்
வாவி தந்ததண் டாமரை வாயினான்
காவி தந்தக ளிப்புமிழ் கண்ணினா
னாவி தந்தவ றாவருட் சொல்லினான். |
| |
"பாவி தந்த
மகற்கு உரி பான்மை கேள்:
வாவி தந்த தண் தாமரை வாயினான்;
காவி தந்த களிப்பு உமிழ் கண்ணினான்;
ஆவி தந்த அறா அருள் சொல்லினான். |
"பாவி
யாகியயான் பெற்ற மகனுக்கு உரிய இயல்பைக் கேள்: அவன்
தடாகத்தில் தோன்றிய குளிர்ந்த தாமரை மலர் போன்ற வாயை உடையவன்;
கருங்குவளை மலரின் தோற்றம் கொண்டு, காண்பவருக்குக் களிப்பூட்டும்
கண்களை உடையவன்; கேட்பவர்க்கு உயிரைத் தந்துதவும் அருள் அறாத
சொல்லை உடையவன்.
| 66 |
பானு யிர்த்தக
தீர்ப்படப் பங்கியான்
வானு யிர்த்தம திப்பட நெற்றியான்
றேனு யிர்த்தமுல் லைச்சிறு மூரலான்
கானு யிர்த்தம லர்முகக் காமரான். |
| |
"பானு உயிர்த்த
கதிர்ப் படப் பங்கியான்;
வான் உயிர்த்த மதிப்பட நெற்றியான்;
தேன் உயிர்த்த முல்லைச் சிறு மூரலான்;
கான் உயிர்த்த மலர் முகக் காமரான். |
"அவன்
பகலவனிடம் தோன்றிய கதிரின் படம் என்னத்தக்க தலை
மயிரை உடையவன்; வானில் தோன்றிய இளம்பிறையின் படம் என்னத்தக்க
நெற்றியை உடையவன்; தேன் சுரந்த முல்லை அரும்பு போன்ற சிறிய
புன்னகை உடையவன்; மணம் பிறப்பித்த தாமரை மலர் போன்ற முக
அழகைக் கொண்டவன்.
| 67 |
பொருளில்
வீங்கிய பொச்சைப்பு யத்தினா
னருளில் வீங்கிய வார்கலி மார்பினான்
றெருளில் வீங்கிய சீர்முகிற் கையினான்
சுருளில் வீங்கிய தோடலர்த் தாளினான். |
|